பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!!

பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 0.94 சதவீதம் வரை அதிகரித்து காணப்படுகிறது.   

Last Updated : Feb 7, 2018, 10:15 AM IST
பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!! title=

மத்திய பட்ஜெட் டிசம்பர்-1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் குறியீட்டெண் தொடர் சரிவை சந்தித்து வந்தது.

இந்நிலையில், தற்போது பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 0.94 சதவீதம் வரை அதிகரித்து காணப்படுகிறது. 

பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 238.41 புள்ளிகள் அதிகரித்து, தற்போது 34,434.35 ஆக உள்ளது. அதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 89.50 புள்ளிகள் அதிகரித்து, தற்போது 10,587.75 ஆக உள்ளது.

நேற்று முன்தினம், சென்செக்ஸ் 792.66 புள்ளிகள் குறைந்து, தற்போது 35,114.00 புள்ளிகள், இருந்தது. அதே போன்று தேசிய பங்குச் சந்தை நிப்டி 245.70 புள்ளிகள் குறைந்து, 10,771.20 புள்ளிகளில் காணப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News