500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பின் வங்கிகளில் செலுத்தப்படும் டெபாசிட் குறித்த விவரங்களை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதேசமயம் கருப்புப் பணம் குறித்து டிசம்பர் 30-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு அபராதம் உள்பட 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மக்கள் தங்களிடமுள்ள கருப்பு பணம் குறித்த விவரங்களை தெரிவிக்க அடுத்த வருடம் மார்ச் 31-ம் தேதி வரை கதானாக முன் வந்து தெரிவிக்கலாம். 50 சதவீதம் வரி மட்டுமே விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.
கருப்பு பணத்தை தானாக முன் வந்து தெரிவிக்க காலக்கெடுவை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை கருப்பு பணத்தை தானாக முன் வந்து தெரிவிக்கலாம். கணக்கில் காட்டப்படாத பணத்திற்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என தெரிகிறது. கருப்பு பணத்தை தானாக முன் வந்து அளிப்பவரின் ரகசியம் காக்கப்படும் என்று அதிகரிகள் கூறினார்கள். மேலும் இதைப்பற்றி அதிகாரமான அறிவிப்பு இன்று வெளியாகும் எனத் தெரிகிறது.
மக்கள் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தில் இணைய வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பிரதம மந்திரி காரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் கணக்கு காட்டி, 50 சதவீத அளவுக்கு வரி செலுத்த வேண்டும். மீதி 50 சதவீதத்தில் 25 சதவீதம், வரி செலுத்துகிறவருக்கு திரும்ப தரப்படும். எஞ்சிய 25 சதவீதம் 4 ஆண்டுக்கு திரும்பப்பெற முடியாத, வட்டி இல்லாத மத்திய அரசின் திட்டங்களில் முதலீடு செய்யப்படும்.
இது கருப்பு பணத்தை மாற்றிக்கொள்வதற்கான கடைசி வாய்ப்பு ஆகும்.