'கிட்னியை காணவில்லை' அதிர்ச்சியடைந்த நோயாளி... மௌனம் காக்கும் மருத்துவர்கள்!

உத்தரப் பிரதேசத்தில் சிறுநீரக கல் அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஒருவர், தனது சிறுநீரகத்தை காணவில்லை என புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 13, 2022, 10:22 AM IST
  • பாதிக்கப்பட்ட நபர் கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
  • சிறுநீரக கல் நீக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • சிறுநீரகத்தை காணவில்லை என புகாருக்கு மருத்துவர்கள் செவிசாய்க்கவில்லை.
'கிட்னியை காணவில்லை' அதிர்ச்சியடைந்த நோயாளி... மௌனம் காக்கும் மருத்துவர்கள்! title=

உத்தரப் பிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தில் சிறுநீரக பாதிப்பு காரணமாக 53 வயதான சுரேஷ் சந்திரா என்பவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதாகவும், அதனை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

 இதற்கு ஒப்புக்கொண்ட சுரேஷிற்கு, சிறுநீரக கல் நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின், அவர் வீட்டில் ஓய்வில் இருந்தபோது, அவருக்கு வயிற்றுக்கடியில் வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அவருக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது,அவருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. 

அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையில், அவரின் ஒரு கிட்னி காணவில்லை என்பது அவருக்கு தெரிந்தது. இதுகுறித்து அவர், புகார் அளித்த நிலையில், இதுவரை சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

மேலும் படிக்க  | டெல்லியில் கடும் நிலநடுக்கம்... ஒரே வாரத்தில் 2ஆவது முறை

இதுகுறித்து சுரேஷ் கூறுகையில்,"கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி, முதல் முறையாக ஒரு தனியார் மருத்துவமனையில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மேற்கொண்டேன். அப்போது எனது சிறுநீரகத்தில் கல் இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால், அதற்கு சிகிச்சை பெற பரிசோதனை மேற்கொண்ட அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். 

பரிசோதனை செய்த அன்றே அதாவது ஏப்.14ஆம் தேதியே அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, எனது சிறுநீரக கல் நீக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். மேலும், எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளில் பட்டியலையும் தந்தனர். பின்னர், ஏப். 17ஆம் தேதி நான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினேன்.

வீடு திரும்பிய பின்னர், எனக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதையடுத்து, நான் மருத்துவருடன் கலந்தாலோசித்தேன். அவர்தான் என்னை மீண்டும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மேற்கொள்ளும்படி கூறினார்" எனத் தெரிவித்தார்.

அப்போதுதான், அவருக்கு தன் சிறுநீரகத்தை காணவில்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, சுரேஷ் சந்திரா மருத்துவமனையை தொடர்புகொண்டபோது, அவர்கள் உரிய பதில் ஏதும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரை தனக்கு அடையாளம் காண முடியவில்லை என்றும் அப்போது தனக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டிருந்தது எனவும் பாதிக்கப்பட்ட சுரேஷ் தெரிவிக்கிறார். 53 வயதான சுரேஷ் உத்தரப் பிரதேசத்தின் கஸ்கஜ் மாவட்டத்தில் உள்ள நாக்லா தால் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார் எனவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க  | Video: குறுக்குவழியில் சென்று ரயிலுக்கு அடியில் மாட்டிய நபர்; கடைசி நொடிவரை திக்... திக்...திக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News