மேற்குவங்கத்தில் ஒருபோதும் NCR பட்டியலுக்கு அனுமதி இல்லை...

மேற்குவங்கத்தில் ஒருபோதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு அனுமதி அளிக்கப்படாது என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 3, 2019, 06:51 PM IST
மேற்குவங்கத்தில் ஒருபோதும் NCR பட்டியலுக்கு அனுமதி இல்லை... title=

மேற்குவங்கத்தில் ஒருபோதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு அனுமதி அளிக்கப்படாது என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அசாமிற்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய வெளிநாட்டவர்களை கண்டறியும் நோக்கில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NCR) பட்டியல் அசாமில்  சமீபத்தில் தயாரிக்கப்பட்டது. இந்தப்பட்டியலில் விடுபட்டவர்கள் வெளிநாட்டு தீர்ப்பாயத்திடம் முறையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசார  பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இந்தியாவுக்குள் ஊடுருவிய ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் குடியேறியவர்களை வெளியேற்றாதீர்கள், அவர்கள் எங்கே செல்வார்கள்? என்ன சாப்பிடுவார்கள்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். ஆனால் அடுத்த தேர்தலுக்குள் இந்தியாவில் கள்ளத்தனமாக குடியேறிய அனைவரும் வெளியே வீசப்படுவார்கள் என்று நான் உறுதி அளிக்கிறேன்” என்று அமித்ஷா உறுதி அளித்தார்.

இந்நிலையில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இன்று  செய்தியாளர்களிடம் பேசுகையில்., மேற்கு வங்காளத்தில் ஒரு போதும் NCR பட்டியல் அனுமதிக்கப்படாது. மேலும், சாதி மற்றும் மத அடிப்படையில் நீங்கள் NCR-னை செயல்படுத்த முடியாது என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

அசாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யவும், அங்கிருக்கும் சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து வெளியேற்றவும் தேசிய குடிமக்கள் பதிவேடு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டதால் புகார் எழுந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின் படி மீண்டும் திருத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு சமீபத்தில் வெளியானது. இரண்டாம் முறையும் அப்பட்டியலில் சுமார் 19 லட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டிருந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News