ரூ.500, ரூ.1,000 விவகாரம்: மம்தா தலைமையில் பேரணி!

Last Updated : Nov 16, 2016, 03:03 PM IST
ரூ.500, ரூ.1,000 விவகாரம்: மம்தா தலைமையில் பேரணி! title=

நோட்டுகள் செல்லாது அறிவிப்பை திரும்ப பெறக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணி.

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்ப பெறக்கோரி பாராளுமன்றம் முன்பு திரினாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். ரூ.500, ரூ.1000 நோட்டு களை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் உத்தரவை திரும்ப பெறக்கோரி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியில் ஏராளமான கட்சி தலைவர்களும், தொண்டர்களும் பங்கேற்றனர். ஜனாதிபதியை சந்தித்து ரூபாய் நோட்டு உத்தரவை திரும்ப பெறக்கோரி மனு கொடுக்கிறார்.

இந்த ஊர்வல பேரணியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பங்கேற்க வில்லை. ஆனால் சிவசேனா கட்சியும், தேசியவாத கட்சி, உமர் அப்துல்லாவின் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்டுள்ளன. பாராளுமன்றம் முன் துவங்கிய இந்த பேரணி ஜனாதிபதி மாளிகை வரை சென்றது. 

Trending News