பிரதமர் மோடி விஷபாம்பு போன்றவர்; அவருடன் பயணித்தால் மரணம் நிச்சயம் -கார்கே சர்ச்சை

Karnataka Election 2023 Updates: பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். அதைத் தொட முயன்றால் செத்துவிடுவீர்கள் எனப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 27, 2023, 06:22 PM IST
  • "பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். நக்கினால் செத்துவிடுவீர்கள்" -கார்கே
  • தனது எஜமானர்களை மகிழ்விப்பதற்காக இதுபோன்று கார்கே பேசுகிறார் -தர்மேந்திர பிரதான்.
  • காங்கிரஸ் என்றால் பொய்யான உத்தரவாதம், காங்கிரஸ் என்றால் ஊழல் - பிரதமர் மோடி.
பிரதமர் மோடி விஷபாம்பு போன்றவர்; அவருடன் பயணித்தால் மரணம் நிச்சயம் -கார்கே சர்ச்சை title=

Mallikarjun Kharge On PM Modi: பிரதமர் நரேந்திர மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர். அவர் நக்கினால் செத்துவிடுவீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் கலபுர்கியில் இன்று (ஏப்ரல் 27, வியாழக்கிழமை) நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பேசிய கார்கே, "பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். அவர் விஷமா இல்லையா என்று நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் நக்கினால் செத்துவிடுவீர்கள்" எனப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையேயான கடுமையான மும்முனை போட்டி நிலவுகிறது.

சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ​​கார்கே:
பிரதமர் குறித்த அவரின் பேச்சு சர்ச்சை ஆனதை அடுத்து, "நான் அவரை (பிரதமர் மோடி) தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என விளக்கம் அளித்தார். அவருடைய சித்தாந்தம் பாம்பு போன்றது, அதைத் தொட முயன்றால் மரணம் நிச்சயம் என்று சொல்ல வந்தேன் எனக்கூறினார்.

ஆனால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிரதமர் மோடி குறித்த பேச்சுக்கு பாஜகவினர் பதிலடி தந்து வருகின்றனர்.

கார்கேவின் மனதில் விஷம் இருக்கிறது: கர்நாடக முதல்வர்
இது பிரதமர் மோடி மற்றும் பாஜக மீதான பாரபட்சமான எண்ணம். அரசியலில் பிரதமரை எதிர்த்துப் போராட முடியாத விரக்தியில் இருப்பதால், இதுபோன்ற எண்ணம் வருகிறது. அவரின் பேச்சை பார்க்கும் போது கார்கேவின் மனதில் விஷம் இருப்பதாக தெரிகிறது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார். 

மேலும் படிக்க: ஜெகதீஷ் ஷெட்டரை மண்ணை கவ்வ வைக்க பாஜக திட்டம்! அமித் ஷா மீது புகரளித்த காங்கிரஸ்

காங்கிரஸ் சாக்கடையில் செல்கிறது: அமித் மாளவியா
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, கார்கேவின் அறிக்கையின் வீடியோவை ட்வீட் செய்து, காங்கிரஸின் விரக்தியை இதிலிருந்து தெரிகிறது. பிரதமர் மோடியை விஷப்பாம்பு என்று காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார். காங்கிரஸ் தொடர்ந்து புதைக்குழிக்குள் விழுந்து வருகிறது. இப்படிப்பட்ட பேச்சுகள் கர்நாடகாவை காங்கிரஸ் கட்சி இழந்து வருவதையே காட்டுகிறது என்றார்.

கார்கேவை காங்கிரஸ் தலைவராக யாரும் கருதவில்லை: அனுராக் தாக்கூர்
மல்லிகார்ஜுன் கார்கேவை காங்கிரஸ் தலைவராக்கியது. ஆனால் அவரை யாரும் தலைவராகக் கருதவில்லை என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். அதனால்தான் இப்படி எல்லாம் அவர் பேசுகிறார். பிரதமர் மோடி குறித்து கார்கே கூறியிருப்பது சோனியா காந்தியின் பேச்சை விட மோசமானது. 2007 குஜராத் சட்டமன்றத் தேர்தலின் போது சோனியா காந்தி பிரதமர் மோடியை மரண வியாபாரி என்று அழைத்தார் என்றார்.

எஜமானர்களை மகிழ்விக்க கார்கே விரும்புகிறார்: தர்மேந்திர பிரதான்
பிரதமர் மோடி தொடர்பான கார்கேயின் கருத்துக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் தனது அரசியல் எஜமானர்களை மகிழ்விப்பதற்காக இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார் என்றார். 

மேலும் படிக்க: கர்நாடகாவில் பாஜக வெற்றி பெறும்! அமித் ஷா சொல்வதை மறுக்கும் கால பைரவர்

காங்கிரஸ் என்றால் பொய்யான உத்தரவாதம்: பிரதமர் மோடி
முன்னதாக இன்று, கர்நாடகாவின் 50 லட்சம் பாஜக தொண்டர்களிடம் உரையாற்றிய பிரதமர், தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் என்றால் பொய்யான உத்தரவாதம், காங்கிரஸ் என்றால் ஊழலுக்கு உத்தரவாதம் என்று கூறினார். 

விரக்தியில் பிரதமர் பேசுகிறார்: ஜெய்ராம்
விரக்தியில் இந்த கருத்தை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி., முதல்வர் யோகிக்கு பிறகு, தற்போது பிரதமர் மோடி விரக்தியின் காரணமாக தரக்குறைவான கருத்துக்களை வெளியிடுகிறார் என்று ஜெய்ராம் கூறியுள்ளார். 

அதே நேரத்தில், 40% கமிஷன் பெற்ற பாஜகவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கர்நாடக மக்கள் மே 10-ம் தேதி உத்தரவாதம் அளிப்பார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார். அதை ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் உத்தரவாதம் அமல்படுத்தப்படும்.

மேலும் படிக்க: மோடியே வந்தாலும் கர்நாடகாவில் பாஜக வெல்லாது - குமாரசாமி!

பிரதமர் மோடியிடம் தரவு உள்ளதா? கார்கே கேள்வி
காங்கிரஸ் மீதான பிரதமர் மோடியின் குற்றசாட்டை அடுத்து, அதற்கு பதிலளித்த கார்கே, காங்கிரஸின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை நிரூபிக்க பிரதமர் மோடியிடம் ஏதேனும் தரவு உள்ளதா என்று கேட்டார்.

ரான் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கார்கே பேசுகையில், ஊழல் பாஜக அரசு மாநிலத்தை கொள்ளையடித்து வருகிறது. இங்கு ஒவ்வொரு வேலைக்கும் 40% கமிஷன் வசூலிக்கப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் நாட்டை விட்டு ஓடுவதற்கு பாஜக அரசு உதவுகிறது. ஊழல்வாதிகளை காப்பாற்றுவதில் பிரதமரே மும்முரமாக இருக்கிறார் எனக் கடுமையாக கார்கே சாடினார்.

மேலும் படிக்க: Karnataka Election 2023: கர்நாடக மாநில சிம்மாசனம் யாருக்கு? கருத்துக் கணிப்புகள் நிதர்சனமாகுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News