மோடிக்கு மாலத்தீவின் உயரிய ‘நிஷான் இசூதீன்’ விருது அறிவிப்பு!

இன்று மாலத்தீவு செல்லும் பிரதமர் மோடிக்கு வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும் மாலத்தீவின் உயரிய விருதான நிஷான் இசூதீன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Jun 8, 2019, 03:59 PM IST
மோடிக்கு மாலத்தீவின் உயரிய ‘நிஷான் இசூதீன்’ விருது அறிவிப்பு! title=

இன்று மாலத்தீவு செல்லும் பிரதமர் மோடிக்கு வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும் மாலத்தீவின் உயரிய விருதான நிஷான் இசூதீன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது!

இரண்டாம் முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி இன்று (ஜூன் 08) தனது முதல் வெளிநாட்டு பயணத்தை துவங்குகிறார். இரண்டு நாள் பயணமாக மாலத்தீவு செல்லும் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான நிஷான் இசூதீன் விருது மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக முதலில் மாலத்தீவிற்கு செல்லும் மோடி பின்னர் இலங்கைக்கும் செல்ல உள்ளார். 2011-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிறகு மாலத்தீவு செல்லும் இந்திய பிரதமர் மோடி. 

கடந்த முறை மோடி பிரதமராக இருந்த போது அவர் செல்லாத அண்டை நாடு பட்டியலில் மாலத்தீவு இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் தற்போது விடுப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து மாலத்தீவு தற்போது நீக்கப்படுகிறது.

மோடியின் இந்த பயணத்தின் போது இருநாடுகள் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. தொடர்ந்து அந்நாட்டு பாராளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதற்கிடையில் வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும் மாலத்தீவின் உயரிய விருதான நிஷான் இசூதீன் விருது, இந்த பயணத்தின் போது மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Trending News