மும்பை: மகாராஷ்டிராவில் நடந்து வரும் அரசியல் அதிகாரப்பகிர்வு போராட்டத்தின் மத்தியில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் மீண்டும் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் டெல்லிக்கு, மகாராஷ்டிரா ஒருபோதும் தலைவணங்காது என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதுவரை மகாராஷ்டிரா தலைவணங்கியது இல்லை. இனிமேலும் வணங்காது. உத்தவ் தாக்கரே இறங்கி வரப்போவதில்லை, அதேபோல சரத் பவாரும் இறங்கிப் இறங்கி வரப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில் கூறியதாவது, மஹாராஷ்டிரா அரசியலில் இதற்கு முன்புக்கூட சரத் பவாரோ அல்லது உத்தவ் தலைவரோ யாருக்காகவும் இறங்கிப் போனதில்லை. டெல்லிக்கு என்றுமே மகாராஷ்டிரா தலை வணங்கியது இல்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், நிதின் கட்கரி மும்பைக்கு வருகிறார் என்றால், அதைப்பற்றி ஏன் விவாதங்கள் நடக்கிறது, அதுக்குறித்து பரபரப்பாக ஏன் பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார். நிதின் கட்கரி மும்பையில் வசிப்பவர். மும்பை வொர்லியில் அவரது வீடு இருக்கிறது. அதனால் அவர் மும்பை வருவார். அவர் மும்பைக்கு வருவதில் புதுசா என்ன செய்தி இருக்கிறது.
நிதின் கட்கரிடம் ஏதாவது செய்தியோ அல்லது கடிதமோ இருந்தால். அதில் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக சிவசேனாவை சேர்ந்தவர் இருப்பார் என்று தான் இருக்கும். பின்னர் இந்த விசியம் குறித்து உத்தவ் ஜியிடம் கூறுவார். மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை திணிக்கும் விதமாக ஏதேனும் நடந்தால் அது பொதுமக்களுக்கு அவமானமாக இருக்கும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பாஜகவும் சிவசேனாவும் கடுமையான அதிகார மோதலில் ஈடுப்பட்டு வருகின்றன. சிவசேனா 50:50 சூத்திரத்தின் கீழ் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதில் பிடிவாதமாக உள்ளது, ஆனால் பாஜக, 50:50 சூத்திரத்தை கைவிட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேவேந்திர ஃபட்னாவிஸை முதல்வராக நியமிக்க வேண்டும் என பிடிவாதம் காட்டி வருகிறது. இன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபையின் கடைசி நாள் ஆகும். அதனால் இன்று ஏதாவது பெரிய அறிவிப்பு வரும் என தகவல்கள் வந்துள்ளன.