Farmers Protest: போராட்டத்தில் கலந்துகொள்ள தில்லிக்கு வரும் மகாராஷ்டிரா விவசாயிகள்

தேசிய தலைநகருக்குச் செல்வதற்கு முன், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கத் தவறிய மத்திய தலைவர்களின் உருவ பொம்மைகளையும் எரித்தனர்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 22, 2020, 12:29 PM IST
  • மகாராஷ்டிரா விவசாயிகளும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியை நோக்கி வருகை.
  • மகாராஷ்டிராவின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்கு வருகை.
  • விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.
Farmers Protest: போராட்டத்தில் கலந்துகொள்ள தில்லிக்கு வரும் மகாராஷ்டிரா விவசாயிகள் title=

புதுடெல்லி: டெல்லியில் நடந்து வரும் விவசாய போராட்டத்திற்கு மத்தியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திங்கள்கிழமை தங்கள் வாகனங்களில் தேசிய தலைநகரை நோக்கி புறப்பட்டனர்.

மத்திய அரசின் வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அவர்களுடன் இணைந்து வருகிறார்கள்.

தற்போது மகாராஷ்டிராவைச் (Maharashtra) சேர்ந்த விவசாயிகளும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தலைநகரை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் (Farmers Protest) ஏற்கனவே நான்காவது வாரத்திற்குள் நுழைந்துள்ளது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் போராட்டக் குழுக்களை மற்றொரு சுற்று கூட்டத்திற்கு அழைத்துள்ளார். முன்னர் நடந்த பல சுற்று பேச்சுக்களில் எந்தவிதமான குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.

ALSO READ: விவசாயிகளுக்கு மோடியின் New Year Gift: இந்த தேதியில் கிடைக்கும் PM Kisan தவணை

மகாராஷ்டிராவின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்குச் சென்று கொண்டிருப்பதாக கிசான் சபா தலைவர் ஒருவர் தெரிவித்தார். 1,200 கி.மீ தூரத்தைக் கடந்து மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலை வழியாக டிசம்பர் 24 ஆம் தேதி அவர்கள் புதுடெல்லியை (New Delhi) அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய தலைநகருக்குச் செல்வதற்கு முன், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கத் தவறிய மத்திய தலைவர்களின் உருவ பொம்மைகளையும் எரித்தனர்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள் உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர் என்று தொழிற்சங்கத் தலைவர் தெரிவித்தார்.

புதிய சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையின் (MSP) பாதுகாப்பை அகற்றுவதற்கும், மண்டி முறையை நீக்குவதற்கும், பெரிய நிறுவனங்களின் தயவிற்கான எதிர்பார்ப்பையும் வழிவகுக்கும் என்று போராடும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்புகள் அப்படியேதான் இருக்கும் என்று அரசாங்கம் பலமுறை வலியுறுத்தியதுடன், எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

ALSO READ: Farmers Protest: 1000km சைக்கிளில் பயணித்து டில்லி போராட்டத்திற்கு வந்த விவசாயி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News