ஆட்டோ மெர்சிடிஸை பின்னுக்குத் தள்ளியது: உத்தவ் தாக்கரேவை குத்திக்காட்டிய ஏக்நாத் ஷிண்டே

Maharashtra CM Eknath Shinde: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர் ஆட்டோரிக்ஷா ஓட்டுநராக இருந்த நாட்களைக் குறிப்பிட்டு, "ஆட்டோரிக்ஷா இப்போது மெர்சிடிஸை பின்னுக்கு தள்ளிவிட்டது” என்று கூறினார். 

Last Updated : Jul 6, 2022, 12:37 PM IST
  • என் தலைமையிலான அரசாங்கம் சாமானிய மக்களுக்கானது: ஏக்நாத் ஷிண்டே
  • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோருக்கு நான் நன்றி கூறுகிறேன்: ஏக்நாத் ஷிண்டே
  • ஃபட்னாவிஸ் துணை முதல்வர் ஆவது எதிர்பாராதது, ஆனால் அவர் பாஜக வழிகாட்டுதலைப் பின்பற்றினார்: ஏக்நாத் ஷிண்டே
ஆட்டோ மெர்சிடிஸை பின்னுக்குத் தள்ளியது: உத்தவ் தாக்கரேவை குத்திக்காட்டிய ஏக்நாத் ஷிண்டே title=

மும்பை: கடந்த சில நாட்களில் மகாராஷ்டிராவில் பல திடீர் திருப்பங்கள் நடந்து மாநில அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தன் முதுகில் குத்தியதாக உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மீது குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே புதன்கிழமை, அவர் ஆட்டோரிக்ஷா ஓட்டுநராக இருந்த நாட்களைக் குறிப்பிட்டு, "ஆட்டோரிக்ஷா இப்போது மெர்சிடிஸை பின்னுக்கு தள்ளிவிட்டது” என்று கூறினார். 

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, அவர் தலைமையிலான அரசாங்கம் சாமானிய மக்களுக்கானது என்றும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நீதி வழங்குவதில் உறுதியாக உள்ளது என்றும் கூறினார்.

"அனைவரும் தங்கள் அரசு என்று உணரும் வகையில் அரசு செயல்படும்" என்று அவர் கூறினார். "ஆட்டோ ரிக்‌ஷா மெர்சிடஸை பின்னுக்குத் தள்ளி விட்டது. ஏனெனில் இந்த அரசு சாமானியர்களுக்கான அரசு, இது அனைத்து பிரிவினருக்கும் நீதி வழங்கும் அரசு. இது எனக்கான அரசு, இது எனக்காக பணிகளை செய்யும் என ஒவ்வொரு தொகுதியில் இருக்கும் அனைத்து மக்களும் நினைக்கும் வகையில் எங்கள் அரசு செயல்படும்” என்று ஷிண்டே கூறினார்.

ஷிண்டே தன்னை முதுகில் குத்தியதாக சிவசேனா தலைவர் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார். ஷிண்டே சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதன் விளைவாக உத்தவ் தாக்கரே ஜூன் 29 அன்று காங்கிரஸ் மற்றும் சிவசேனாவை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.

மேலும் படிக்க | தாஜ்மஹாலால் தான் பெட்ரோல் விலை ஏறியுள்ளது - ஒவைசி கூறும் காரணம் என்ன? 

ஆட்சி அமைப்பதில் பாஜகவின் ஆதரவைப் பற்றிக் குறிப்பிட்ட ஷிண்டே, அதிகாரத்திற்காக மட்டுமல்ல, சித்தாந்தத்திற்காகவும் நாங்கள் இருக்கிறோம் என்பதை கட்சி நாட்டு மக்களுக்கு காட்டியுள்ளது என்றார்.

"அதிகாரத்திற்காக பாஜக எதை வேண்டுமானாலும் செய்யும் என்ற கருத்து மக்களிடையே இருந்தது. ஆனால், இந்த 50 பேரும் இந்துத்துவா நிலைப்பாட்டை, கருத்தியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்,  அவர்களின் செயல்திட்டம் வளர்ச்சி மற்றும் இந்துத்தவாவின் பக்கம் உள்ளது, இவர்களுக்கு ஆதரவு அளிக்க வெண்டும் என்பதை அவர்கள் நாட்டு மக்களுக்கு காட்டியுள்ளனர். மேலும், அதிக எண்ணிக்கையில், அதிக எம்.எல்.ஏ.க்கள் இருந்த போதிலும், அவர்கள் எங்களை ஆதரித்தனர். முதல்வர் பதவிக்கும் எங்களுக்கு ஆதரவு அளித்தனர்" என்று ஷிண்டே கூறினார்.

மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லுமாறும், வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறும் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக ஷிண்டே கூறினார். வளர்ச்சி முயற்சிகளுக்கு தனது மற்றும் மத்திய அரசின் முழு ஆதரவையும் பிரதமர் உறுதியளித்ததாக முதல்வர் தெரிவித்தார். 

"இது பெரிய விஷயம். மத்திய அரசும் எங்களுடன் உள்ளது. நாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. பாஜக மற்றும் சிவசேனா இடையே தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இருந்தது. அந்த கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைக்கிறோம்." என்று ஷிண்டே கூறினார்.

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறுவது குறித்த அவர் தெரிவித்த கருத்து குறித்து கேட்டதற்கு, 170 எம்எல்ஏக்கள் கூட்டணியில் இருப்பதாகவும், இன்னும் 30 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர் என்றும் ஷிண்டே கூறினார். “200க்கும் மேற்பட்ட இடங்களை பெறலாம்,'' என்றார் அவர். தனது பெரிய உள்ளத்தை வெளிப்படுத்திய பா.ஜ.க தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் பதவியை ஏற்றார் என்றார். 

ஃபட்னாவிஸ் துணை முதல்வர் ஆவது எதிர்பாராதது, ஆனால் அவர் பாஜக வழிகாட்டுதலைப் பின்பற்றினார் என்றும் ஷிண்டே கூறினார். "இது எதிர்பாராதது. ஆனால் அவர் கட்சியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினார். மேலும் என்னைப் போன்ற பாலாசாஹேப் மற்றும் ஆனந்த் திகேவின் தொண்டர் முதல்வராக்கப்பட்டார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோருக்கு நான் நன்றி கூறுகிறேன். " என்று அவர் கூறினார்.

அமைச்சரவை அமைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விரைவில் இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார். எம்.வி.ஏ அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் கட்சிக்கு லாபம் இல்லை என்றும், இதனால் கட்சி சேதம் அடைந்து வருவதாகவும் சிவசேனா தலைமைக்கு பலமுறை தான் தெரிவித்ததாக ஷிண்டே கூறினார்.

காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் கூட்டணி அமைக்கும் முடிவை மாற்றிக்கொள்ள கட்சி தலைமைக்கு பலமுறை எடுத்துக்கூறியதாகவும், ஆனால் அதில் தங்களால் வெற்றிபெற முடியவில்லை என்றும் ஷிண்டே கூறினார்.

மேலும் படிக்க | ஆமா, இது ‘ED’ கூட்டணி ஆட்சிதான்! ஆனா... ‘பொடி’ வைத்துப் பேசிய பட்னாவிஸ்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News