காங்கிரஸ் ஆட்சியும் ராகுல் காந்தி போல குழப்பத்தில் உள்ளது: சிவராஜ் சவுகான்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலவே மத்திய பிரதேச அரசாங்கமும் குழப்பத்தில் உள்ளது என முன்னால் ம.பி. முதல் அமைச்சர் சிவராஜ் சவுகான் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 24, 2019, 08:49 PM IST
காங்கிரஸ் ஆட்சியும் ராகுல் காந்தி போல குழப்பத்தில் உள்ளது: சிவராஜ் சவுகான் title=

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலவே மத்திய பிரதேச அரசாங்கமும் குழப்பத்தில் உள்ளது என முன்னால் ம.பி. முதல் அமைச்சர் சிவராஜ் சவுகான் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சிக்கு முன்பு சிவராஜ் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. பாஜக தொடர்ந்து அங்கு மூன்று முறை ஆட்சி அமைத்தது. கடைசியாக நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்ற போது பவந்தர் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்தார்கள். இதன் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது. ஆதரவு விலை மற்றும் சந்தை விலை இரண்டும் இடைப்பட்ட விலை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது, இந்த பவந்தர் யோஜனா திட்டத்தை கைவிடப் போவதாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், இந்த பவந்தர் யோஜனா திட்டத்தில் சில மாற்றங்களை செய்வதுடன், இந்த திட்டம் தொடரும் என அறிவித்தது.

இதுக்குறித்து பேசிய முன்னால் அமைச்சர் சிவராஜ் சவுகான் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் முதலமைச்சராக இருக்கும் போது பவந்தர் யோஜனா கொண்டுவரப்பட்டது. தற்போது காங்கிரஸ் அரசாங்கம் இந்த யோஜனவை ரத்து செய்வதாக கூறுகிறது. எதிர்ப்பு கிளம்பியதால் இந்த யோஜனா தொடரும் எனக் கூறுகிறது. மத்திய பிரதேசத்தில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியும் ராகுல்காந்தி போல குழப்பத்தில் உள்ளது" என கூறியுள்ளார்.

Trending News