உண்மையை எதிர் கொள்ள அஞ்சுகிறது காங்கிரஸ் தலைமை: சிவ்ராஜ் சவுஹான்

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்  சிங் சவுகான், காங்கிரஸ் தலைமை உண்மையை எதிர் கொள்ள அஞ்சுகிறது என கூறினார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 24, 2020, 09:55 PM IST
  • 2019 ஆம் ஆண்டில் மக்களவைத்தேர்தலில் congress படுதோல்வி அடைந்த பின்னர், ராகுல் காந்தி (Rahul Gandhi) தலைவர் பதவியில் இருந்து ராஜினமா செய்தார்.
  • நேரு குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் கட்சியில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என நெடுங்காலமாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
உண்மையை எதிர் கொள்ள அஞ்சுகிறது காங்கிரஸ் தலைமை: சிவ்ராஜ் சவுஹான் title=

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்  சிங் சவுகான், காங்கிரஸ் தலைமை உண்மையை எதிர் கொள்ள அஞ்சுகிறது என கூறினார். அவர்கள் கூறுவதை ஏற்காதவர்களுக்கு துரோகிகள் என முத்திரை குத்தப்படுகிறது என்றார். 

”காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள், முழு நேர தலைவர் வேண்டும் என கோரினால், இளவரசர் ராகுல், அனைவரும் பாஜவுடன் சேர்த்து அவ்வாறு செய்கிறார்கள் என்கிறார். கபில் சிப்பல் பாஜகவுடன் இணைந்து விட்டாரா? குலாம் நபி ஆசாத் பாஜகவுடன் இணைந்து விட்டாரா? காங்கிரஸ் தலைமை உண்மையை எதிர் கொள்ள அஞ்சுகிறது. கட்சியில் யாராவது எதிர்த்தால், துரோகி பட்டம் சூட்டப்படுகிறது. தங்கள் சொல்வதற்கு ஆமாம் சாமி போடுபவர்கள் தான் விசுவாசமானவர்கள்” என்று  மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்  சிங் சவுகான் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை (Congress party)  சேர்ந்த 20 பேர், சோனியா காந்திக்கு கடிதம் எழுதி, கட்சியில் பெரிய அளவில் மாற்றம் தேவை எனவும், ஒரு உறுதியான தலைமை வேண்டும் எனவும் கோரினர்.

" நான் கமல்நாத்தோ, திக்விஜய் சிங்கோ அல்ல. மத்திய பிரதேசம் எங்களது கோவில், இதில் வாழும் மக்கள் தெய்வங்கள், இந்த தெய்வங்களை பூஜிப்பவர் தான் சிவ்ராஜ் சிங் சவுஹான்” என அவர் கூறினார்.

“இந்த மாநிலத்தை புதிய வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்வோம். கமல்நாத்தை போல் பணம் இல்லை என அழ மாட்டோம்” என அவர் மேலும் கூறினார்.

ALSO READ | தலைமுறை கடந்தும் மாறாத தலைமை.. இந்திரா முதல் இன்று வரை நீடிக்கும் ஆதிக்கம்..!!!

2019 ஆம் ஆண்டில் மக்களவைத்தேர்தலில் Congress படுதோல்வி அடைந்த பின்னர், ராகுல் காந்தி (Rahul Gandhi) தலைவர் பதவியில் இருந்து ராஜினமா செய்தார். அதனை தொடர்ந்து, திருமதி சோனியா காந்தி (sonia Gandhi) தலைவராக பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக 1997 முதல் தொடர்ந்து 17 ஆண்டுகள் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரு குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் கட்சியில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என நெடுங்காலமாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

ALSO READ | காங்கிரஸ் கட்சியில் வலுக்கும் தலைமை பிரச்சனை... கட்சித் தலைமையில் மாற்றமா...!!!
 

Trending News