டெல்லி: 2019 மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் நட்சத்திர வேட்பாளர் அதீஷி, கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது பாஜக போட்டியாளர், அதே தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான முன்னால் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இரண்டு தனித்தனி வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதாக புகார் அளித்துள்ளார்.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற கெளதம் கம்பீர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியை சமாளிக்க பிரபலங்களை நிறுத்தினால் சரியாக இருக்கும் என நினைந்தத பாஜக, டெல்லி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக கெளதம் கம்பீரை அறிவித்தது. அதேபோல ஆம் ஆத்மி சார்பில் அதீஷி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்தநிலையில், பாஜக வேட்பாளர் கெளதம் கம்பீர் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் அதீஷி புகார் அளித்துள்ளார். அதில் கெளதம் கம்பீர் இரண்டு தனித்தனி வாக்காளர் அட்டைகள் வைத்துள்ளார். ஒன்று டெல்லி கரோல் பாக் மற்றும் மற்றொன்று ராஜேந்தர் நகர் ஆகிய இரண்டு இடங்களில் வாக்களர் பட்டியலில் பெயர் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.
மேலும் அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளார். பிரிவு 17-ன் மற்றும் பிரிவு 31 சட்டப்படி இரண்டு வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்க வழியுண்டு எனவும் கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது.
I have filed a criminal complaint against the BJP candidate from East Delhi Gautam Gambhir over his possession of two voter IDs in two separate constituencies of Delhi, Karol Bagh and Rajinder Nagar. #GambhirApradh pic.twitter.com/tYM6QVcFul
— Atishi (@AtishiAAP) April 26, 2019
டெல்லி உள்ள மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் மே 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும்.