2019 மக்களவை தேர்தல் குறித்து இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பு அறிவிக்காத நிலையில், மக்களவை தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒருபுறம் ஆளும் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மறுபுறம் சில கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவாரத்தை நடத்தி வருகிறது. சில மாநிலங்களில் அக்கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு குறித்தும் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில் டெல்லியை பொருத்த வரை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் மொத்தம் ஏழு மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் ஆறு தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. அதன்படி, சாந்தினி சௌக் தொகுதியில் பங்கஜ் குப்தா, வடகிழக்கு தில்லியில் திலிப் பாண்டே, கிழக்கு டெல்லியில் அதிசி, தெற்கு டெல்லியில் ராகவ் சட்டா, புது டெல்லி தொகுதியில் பிரஜீஷ் கோயல், வடமேற்கு தொகுதியில் குகான் சிங் என 6 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மற்றொரு தொகுதியான மேற்கு தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை.
Announcement : Declaration of candidates for the upcoming Loksabha Polls
1. New Delhi - @brijeshgoyalaap
2. East Delhi - @AtishiAAP
3. North East Delhi - @dilipkpandey
4. South Delhi - @raghav_chadha
5. Chandani Chowk - @pankajgupta
6. North West Delhi - @AAPGuganSingh pic.twitter.com/EuNyseK1Fi
— AAP (@AamAadmiParty) March 2, 2019
இதுக்குறித்து கோபால் ராய் டெல்லி ஆம் ஆத்மி கமிட்டி அமைப்பாளர் கோபால் ராய் கூறுகையில், மேற்கு தொகுதிக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். மேலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து பேசப்பட்டது. ஆனால் இறுதி முடிவு எட்டப்படததால், நாங்கள் தனித்து போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளோம் எனக் கூறினார்.