பள்ளி சத்துணவில் பல்லி வால்: 45 குழந்தைகளின் நிலைமை?

உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் அசுத்தமான உணவை உட்கொண்டதால் சுமார் 90 மாணவர்கள் உடல்நிலை சரியில்லாமல் தவித்தனர்.

Last Updated : Oct 14, 2017, 09:13 AM IST
பள்ளி சத்துணவில் பல்லி வால்: 45 குழந்தைகளின் நிலைமை? title=

மிர்சாபூர்: உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் அசுத்தமான உணவை உட்கொண்டதால் சுமார் 90 மாணவர்கள் உடல்நிலை சரியில்லாமல் தவித்தனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வயிற்று வலி மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற உபாதைகள் பெற்றதாக புகார் செய்துள்ளனர். பின்னர் வின்யாசல் ஹெல்த் மையத்தில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 45 குழந்தைகளின் நிலைமை மோசமான நிலைமையில் இருப்பதால் அவர்கள் அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளியின் முதல்வர் ஜெய் சிங் கூறுகையில் "உணவை சாப்பிட்ட பிறகு சில மாணவர்கள் வயிற்று வலி மற்றும் வாந்தியெடுப்பு பிரச்சனைகள் இருப்பதாக புகார் அளித்தனர். உடனடியாக நாங்கள் உணவை பரிசோதித்தபோது உணவில் பல்லியின் வால் காணப்பட்டது. எனவே உடனடியாக மாணவர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தோம்" என தெரிவித்துள்ளார்.

இந்த பள்ளி விந்தியாசலின் பெர்சியா துவா கிராமத்தில் அமைந்துள்ளது.

Trending News