#LIVE UnionBudget2018: மத்திய பட்ஜெட்டின் முழு விவரம் -உள்ளே!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் முழு விவரங்களை பார்ப்போம்

Last Updated : Feb 1, 2018, 02:09 PM IST
#LIVE UnionBudget2018: மத்திய பட்ஜெட்டின் முழு விவரம் -உள்ளே! title=

13:25 01-02-2018

பட்ஜெட் உரை முடிந்த பின்னர் நாடாளுமன்றத்தை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார் சுமித்ரா மகாஜன்.


12:53 01-02-2018

பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அருண்ஜெட்லி. பட்ஜெட் எதிரொலியாக மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

 


12:51 01-02-2018

இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன், தொலைக்காட்சி பெட்டிகள் மீதான சுங்க வரி உயர்வு -நிதி அமைச்சர். 

கல்வி கூடுதல் வரி 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்வு -நிதி அமைச்சர்


12:50 01-02-2018

மருத்துவ காப்பீடுக்காக செய்யப்படும் செலவில் 50000 ரூபாய் வரை ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு வரி விலக்கு -நிதியமைச்சர் அருண் ஜெட்லி.


12:44 01-02-2018

மூத்த குடிமக்களுக்கு எல்.ஐ.சி மூலம் சிறப்பு திட்டம். ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு 40000 ரூபாய் வரை வட்டி வருமானத்தில் வரி பிடித்தம் இல்லை.

மருத்துவ காப்பீடுக்காக செய்யப்படும் செலவில் 50000 ரூபாய் வரை ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு வரி விலக்கு - அருண் ஜெட்லி. 


12:43 01-02-2018

நேர்மையாக வரி  செலுத்தும் நபர்களுக்கும் விருதும், பரிசும் வழங்கப்படும்- நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


12:37 01-02-2018

தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக தொடரும் -நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


12:36 01-02-2018

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8 கோடியாக உயர்வு. பண மதிப்பு இழப்பு நடவடிக்கை “நேர்மையானவர்களின் விழா”-வாக கொண்டாடப்பட்டது -நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


12:35 01-02-2018

கடந்த ஆண்டு பட்ஜெட் தொகையை விட நடப்பு ஆண்டில் 3.5% உயர்வு - நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


12:34 01-02-2018

2019-ம் ஆண்டிற்கான உள் கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.5.97 லட்சம் கோடி நிலை நிறுத்தப்பட்டுள்ளது  - நிதியமைச்சர் அருண் ஜெட்லி.


12:33 01-02-2018

விவசாயிகளால் நடத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட விவசாய நிறுவனங்களுக்கு முழு வரி விலக்கு -அருண் ஜெட்லி.


12:31 01-02-2018

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் நியமனம் செய்ய புதிய வழிமுறை. ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஊதிய உயர்வு பரிசீலனை செய்ய திட்டம்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசி ஏற்றத்துக்கு ஏற்ப தானாகவே எம்.பி.க்களின் ஊதியம் மாற்றியமைக்கப்படும் - அருண் ஜெட்லி


12:30 01-02-2018

பொதுமக்கள் தங்கத்தை எளிதாக மாற்றிக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்படும் -நிதியமைச்சர் அருண் ஜெட்லி.


12:27 01-02-2018

வருமான வரித்துறையின் கண்காணிப்பின் கீழ் பிட் காயின்கள் கொண்டுவரப்படும். பிட் காயின் பணமுறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் -நிதியமைச்சர் அருண் ஜெட்லி.


12:26 01-02-2018

தற்போது இந்தியாவில் உள்ள 124 அரசு விமான நிலையங்களின் எண்ணிக்கை 5 மடங்கு உயர்த்தப்படும் - நிதியமைச்சர் அருண் ஜெட்லி.


12:23 01-02-2018

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கான ஊதியம் உயர்வு.

குடியரசுத்தலைவர்- 5 லட்சம், துணைக் குடியரசுத்தலைவர்- 4 லட்சம், ஆளுநர்கள்-  3.5 லட்சம் ஆக ஊதியம் உயர்வு


12:21 01-02-2018

அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ஆதாரைப் போல தனி அடையாள அட்டை. 


12:20 01-02-2018

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு. டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு 3073 கோடி ஒதுக்கீடு -நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


12:19 01-02-2018

2019 ஆம் ஆண்டிற்குள் 18000 கி.மீ. தூர ரயில் பாதைகள் இருவழிப்பாதை மாற்றப்படும் -நிதியமைச்சர் அருண் ஜெட்லி.


12:18 01-02-2018

சுங்கச் சாவடிகளில் மின்னணு பரிமாற்ற முறையை அமல்படுத்த திட்டம். 1 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி. 


12:16 01-02-2018

மும்பை மாநகர ரயில்வே வசதிகளுக்கு 11000  கோடி ரூபாய் ஒதுக்கீடு. டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு 3073 கோடி ஒதுக்கீடு.

பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 17000  கோடி ரூபாய் ஒதுக்கீடு -நிதியமைச்சர் அருண் ஜெட்லி.


12:15 01-02-2018

பாரத் நெட் திட்டம் மூலம் ஒரு லட்சம் கிராமங்களுக்கு இணையதள இணைப்பு தரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்திற்கு ரூ. 2.04 லட்சம் கோடி நிதி. மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு -நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


12:13 01-02-2018

பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கப்படும்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் வைஃபை வசதி. ஹவாய் செருப்பு போட்ட எளியவரும் ஹவாய் ஜஹாசில் (விமானத்தில்) பயணிக்க வைப்போம். 4000 கி.மீ. நீளத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். 

99 புதிய நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்படும் 12:05 pm தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வளர்ச்சிக்கு ரூ. 1.5 லட்சம் கோடி. கல்வித்துறை வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் கோடி.


12:11 01-02-2018

பெங்களூருவில் ரூ.17 ஆயிரம் கோடியில் புறநகர் ரயில் சேவை ஏற்படுத்தப்படும்; 25,000 ரயில் நிலையங்களில் எக்ஸ்கலேட்டர் அமைக்கப்படும் -நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 

பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கப்படும்.

ஹவாய் செருப்பு போட்ட எளியவரும் ஹவாய் ஜஹாசில் (விமானத்தில்) பயணிக்க வைப்போம். 


12:08 01-02-2018

4000க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவர்; ரயில் தண்டவாளங்கள் பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும் -நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 

ஜவுளித்துறைக்கு ரூ. 7148 கோடி ஒதுக்கீடு.

பெங்களூருவில் ரூ.17,000 கோடியில் புறநகர் ரயில் சேவை

18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும்

99 புதிய நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்படும்

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வளர்ச்சிக்கு ரூ. 1.5 லட்சம் கோடி

கல்வித்துறை வளர்ச்சிக்கு ரூ. 1 லட்சம் கோடி


12:07 01-02-2018

18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும்.

99 புதிய நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்படும்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வளர்ச்சிக்கு ரூ. 1.5 லட்சம் கோடி.

கல்வித்துறை வளர்ச்சிக்கு ரூ. 1 லட்சம் கோடி.

அனைத்து ரயில்களிலும் வைபை வசதி, சிசிடிவி பொருத்தப்படும்.


12:05 01-02-2018

25,000 பேருக்கு அதிகமாக பயன்படுத்தும் அனைத்து ரயில் நிலையங்களிலும் எஸ்கலேட்டர்கள் வசதி -நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


12:03 01-02-2018

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடனுதவி  - நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 

மாற்றுத்திறனாளிகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம். வருங்கால வைப்பு நிதிக்கு பணியில் சேர்ந்த முதல் 3 ஆண்டுகளில் பெண்கள் 8% செலுத்தினால் போதும்  - நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


12:01 01-02-2018

கங்கை சுத்தம் செய்தல் பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. நமாமி கங்கை திட்டத்தின் கீழ் 187 திட்டங்களுக்கு ஒப்புதல் -நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


11:58 01-02-2018

மக்களுக்கு 70 லட்சம் வேலைவாய்ப்பு உருவானது அண்மையில் வெளியான ஆய்வு முடிவில் தெரியவந்தது - நிதியமைச்சர் அருண் ஜெட்லி.


11:57 01-02-2018

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடனுதவி. ஜவளித்துறை வளர்ச்சிக்காக ரூ.7,148 கோடி ஒதுக்கீடு -நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


11:56 01-02-2018

கல்வி தரத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் மிகப்பெரிய கருவியாக உள்ளது. கல்வியில் டிஜிட்டல் உபயோகத்தை அதிகரிக்கவும், கரும்பலகையிலிருந்து டிஜிட்டல் போர்டுக்கு படிப்படியாக முன்னேறவும் நாங்கள் ஊக்கம் அளிப்போம் - நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


11:54 01-02-2018

10 கோடி ஏழை குடும்பங்களுக்கு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ வசதிக்கான காப்பீடு. இதன் மூலம் 50-கோடி மக்கள் பயனடைவார்கள் -நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகள் கட்டப்படும் - நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


11:52 01-02-2018

கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளுக்காக ரூ.16,713 கோடி ரூபாய் ஒதுக்கீடு -நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


11:45 01-02-2018

மூன்று நாடாளுன்ற தொகுதிக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை. காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதம் 500 வழங்கப்படும் -நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


11:43 01-02-2018

புதிய இலவச மருத்துவ வசதி திட்டத்திற்கு சுகாதாரத்துறைக்கு 1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு 10 -கோடி ஏழை குடும்பங்களுக்கு வருடத்திற்கு 5-லட்சம் ரூபாய் வரை மருத்துவ வசதிக்கான காப்பீடு. இதன் மூலம் 50 கோடி மக்கள் பயனடைவார்கள் - நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

ஏழை, எளிய குடும்பங்களுக்கு மின் வசதி வழங்க ரூ. 16,000 கோடி ஒதுக்கீடு -நிதியமைச்சர் அருண் ஜெட்லி.


11:40 01-02-2018

கிராமப்புற வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு- நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 

பழங்குடியினரின் குழந்தைகளுக்கான கல்விக்காக ஏகலவ்யா என்ற தனித்திட்டம் தொடங்கப்படும். குஜராத்தின் வதோதரா நகரில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

பி.டெக் மாணவர்கள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு பி.எச்டி படிக்க உதவி செய்யப்படும் - நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


11:39 01-02-2018

அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ.51 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் -நிதியமைச்சர் அருண் ஜெட்லி.


11:38 01-02-2018

கிராமப்புற வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு. நாடு முழுவதும் தரமான கல்வி வழங்கும் வகையில் ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கரும்பலகைகள் அகற்றப்பட்டு டிஜிட்டல் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளது- நிதியமைச்சர் அருண் ஜெட்லி


11:37 01-02-2018

ஏழைகளுக்கான இலவச சிலிண்டர் இணைப்புத் திட்டம் மேலும் விரிவு படுத்தப்படும்- நிதியமைச்சர் அருண் ஜெட்லி


11:35 01-02-2018

கிசான் கிரெடிட் கார்டு வசதியை மீன்வளம் மற்றும் கால்நடை துறைக்கு விரிவாக்கம் செய்ய பரிந்துரை; மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 75,000 கோடி கடன் வழங்க இலக்கு- நிதியமைச்சர் அருண் ஜெட்லி

கால்நடை மற்றும் மீன்வளத்துறைக்கு 10ஆயிரம் கோடி ஒதுக்கீடு, மற்றும் 4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சார இணைப்பு வழங்கப்படும். - நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


11:32 01-02-2018

விவசாய கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும். 2018 மற்றும் 2019-ம் ஆண்டுக்கான விவசாயக்கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் -நிதியமைச்சர் அருண் ஜெட்லி


11:31 01-02-2018

ஏழைகளுக்கான இலவச சிலிண்டர் இணைப்புத் திட்டம் மேலும் விரிவு படுத்தப்படும். 4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சார இணைப்பு வழங்கப்படும் -நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

இரண்டு கோடி கழிப்பறைகள் அடுத்த ஒரு வருடத்தில் ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் கட்டப்படும் -நிதியமைச்சர் அருண் ஜெட்லி.


11:29 01-02-2018

காற்றுமாசுபாட்டை கட்டுபடுத்த ஹரியானா, பஞ்சாப், டெல்லி மாநிலங்களுக்கு நிதி உதவி செய்யப்படும் -நிதியமைச்சர் அருண் ஜெட்லி.


11:27 01-02-2018

கிராமச் சாலைகள் மேம்பாட்டில் அரசு முழுக் கவனம் செலுத்தி வருகிறது. கால்நடை மற்றும் மீன்வளத்துறைக்கு 10ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

விளை பொருள் ஏற்றுமதியை ஊக்குவிக்க பிரம்மாண்டமான உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் - நிதியமைச்சர் அருண் ஜெட்லி.


11:24 01-02-2018

விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. வேளாண் சந்தைகள் அமைக்க ரூ.2000 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

நாட்டின் உணவு தானிய உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. விவசாயிகளின் வருவாயை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிபாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது- நிதியமைச்சர் அருண் ஜெட்லி.


11:22 01-02-2018

2018- 2019 ஆம் நிதியாண்டின் 2-ம் பகுதியில் 7.2% முதல் 7.5% வரை பொருளாதார வளர்ச்சி இருக்கும்- நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

நாடு ஊழலில் மூழ்கிக் கிடந்தது என்ற அருண் ஜெட்லியின் பேச்சுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு.


11:17 01-02-2018

விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க நடவடிக்கை; விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது - நிதியமைச்சர் அருண் ஜெட்லி 

மாநில அரசுகளுடன் இணைந்து கல்வித்தரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது- நிதியமைச்சர் அருண் ஜெட்லி

பணமதிப்பு நீக்கம் மூலம் கறுப்பு பணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2018- 2019-ம் நிதியாண்டின் 2 ஆம் பகுதியில் 7.2% முதல் 7.5% வரை பொருளாதார வளர்ச்சி இருக்கும்- நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


11:15 01-02-2018

நலிந்தோருக்கு நன்மை செய்யும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும். இந்த பட்ஜெட்டில் விவசாயம், கல்வியை வலிமைப்படுத்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது- நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். 

அரசின் நடவடிக்கைகளால் நேரடி அந்நிய முதலீடு அதிகளவில் உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி உள்ளிட்ட மறைமுக வரி சீர்திருத்தங்களால் வரி செலுத்தும் முறைஎளிதாக்கப்பட்டுள்ளது- அருண் ஜெட்லி!


11:13 01-02-2018 

 


11:09 01-02-2018

இந்தியாவின் பொருளாதாரம் தற்போது நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து உலக பொருளாதார தரத்தில் இந்தியா தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது என கூறினார் அருண் ஜெட்லி. 

 

 


11:09 01-02-2018

2018 மற்றும் 2019-ம் ஆண்டுக்கான யூனியன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 


11:05 01-02-2018

2018 மற்றும் 2019-ம் ஆண்டுக்கான யூனியன் பட்ஜெட் தாக்கல் உரை துவங்கியது.


11:00 01-02-2018

பார்லிமென்ட்டில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது.


10:55 01-02-2018

2018 மற்றும் 2019-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் இன்னும் 10 நிமிடங்களில் தாக்கல் செய்ய இருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.


10:42 01-02-2018

2018 மற்றும் 2019-ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 


10:28 01-02-2018

யூனியன் பட்ஜெட் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

பட்ஜெட் குறித்த பொதுமக்கள் கேள்விக்கு பதிலளிக்கிறார் அருண் ஜெட்லி.


10:21 01-02-2018 

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பட்ஜெட் உரையை வாசிக்க உள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 

யூனியன் பட்ஜெட் உரை நகல்காளை மோப்ப நாய்களின் மூலம் பரிசோதிக்கும் காவலர்கள்.

 


10:16 01-02-2018

பட்ஜெட் தாக்கல் செய்வதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார். 


09:56 01-02-2018

யூனியன் பட்ஜெட் உரை நகல்காளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அருண் ஜெட்லி பார்லிமென்ட் வந்தடைந்தார். 

 


09:44 01-02-2018

யூனியன் பட்ஜெட் உரை நகல் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது.


09:37 01-02-2018

நிதி அலுவலகத்தில் குடியரசுத் தலைவரை சந்தித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி.


09:06 01-02-2018

பட்ஜெட் தாக்கல் செய்வதையொட்டி டெல்லியில் உள்ள நிதியமைச்சகத்துக்கு அருண்ஜேட்லி வருகை 

இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஜேட்லி. 

தனது குழுக்களுடன் நிதி மந்திரி அருண் ஜேட்லி நிதி அமைச்சகம் முன்னாள் உள்ள புகை படம் புகைப்படம். 


08:51 01-02-2018

பட்ஜெட் கூட்டத்தொடரை குறித்து காரணமாக இந்த திடீர் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 

இன்று காலை சரியாக 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். 

இதை தொடர்ந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு விட்டதாக தகவல் வந்துள்ளது.  

பட்ஜெட்டில் இருக்கும் குறைபாடுகள், குறைகள், தேவைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட இருக்கிறது.


பாராளுமன்றத்தில் இன்று யூனியன் பட்ஜெட் 2018-னை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார்.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பின்தங்கிய வகுப்பினருக்கான கமிஷன் மற்றும் முத்தலாக் விவகாரங்கிளின் முக்கிய பின்னூட்டங்களைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க ஆட்சியின் கடைசி முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 2018 -19-ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்கிறார்.

அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்யவுள்ள இந்த பட்ஜெட்டில் என்ன சலுகை இடம் பெறவுள்ளது. வருமான வரி எந்தளவிற்கு இருக்கப் போகிறது என்று பல்வேறு தரப்பிலும் எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில், இந்த பட்ஜெட்டில் இம்முறை வலுவான அரசியல் ரீதியிலான கண்ணோட்டம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த மக்களவைத் தேர்தலைக் கவனத்தில் கொண்டு, விவசாயிகளையும் ஏழைகளையும் கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. தற்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2.5 லட்சம் ரூபாயாக உள்ளது. இது ரூ.3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக வணிகர்கள் ஜி.எஸ்.டி.யால் கடும் அவதிப்பட்டனர். எனவே விவசாயிகளுக்கு சலுகை அளிக்கும் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இது.

இன்று (பிப்., 1) துவங்கி பிப்., 9 வரை இந்த கூட்டத்தொடர் தொடர்கிறது. பின்னர் பட்ஜெட் அமர்வின் இரண்டாவது கட்டம் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 6-ஆம் நாள் வரை நடைபெறுகிறது.

பட்ஜெட் தொடர்பான அலுவல்களைத் தவிர, பல்வேறு சட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அவற்றில் முத்தலாக் தடைச்சட்ட மசோதாவும் ஒன்று என்பது குறிப்பிடதக்கது.

Trending News