புதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள்: பிரதமர் மோடி

Last Updated : Aug 9, 2017, 02:32 PM IST
புதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள்: பிரதமர் மோடி title=

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி லோக் சபாவில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர்,

வெள்ளையனே வெளியேறு போன்ற நாட்டின் சுதந்திர போராட்டங்களை பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.  

வெள்ளையனே வெளியேறு போராட்டம் நாட்டிற்கு ஒரு தலைவரை உருவாக்கியது. சுதந்திர போராட்டம் மட்டுமல்லாமல், இன வேறுபாட்டை களைவதாகவும், வெள்ளையனே வெளியேறு போராட்டம் அமைந்தது. 
பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டம் இந்தியாவில் துவங்கியது. இங்கேயே துவங்கிய இந்த போராட்டம் இங்கேயே முடிந்தது என்றார். சுதந்திர போராட்டத்தில் பெண்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளனர். 

மகாத்மா காந்தியின் முழக்கம் செய் அல்லது செத்து மடி. இதனை  பின்பற்றி நாட்டு மக்கள் பல தியாகங்களை செய்துள்ளனர் என குறிப்பிட்டார். நாடு ஒன்றுபட்டால் தடைகள் அனைத்தும் நீங்கும். தடைகள் நீங்கினால் நாடு முழு சுதந்திரம் அடையும். 

வறுமை, கல்வி, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை நம் கண்முன் உள்ள பெரிய சவால்கள் என்றார். சவால்கள் குறித்து நேர்மறை மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஒரே இலக்கை வைத்து போராடினால் நாம் நினைத்ததை பெறலாம்.  

2022-ம் ஆண்டில் ஏழ்மை, மாசுபாடுகள், ஊழல், பயங்கரவாதம், சாதியம், மதவாதம் ஆகியவை இல்லாத இந்தியாவை உருவாக்குவதே நமது கனவு என உறுதி ஏற்போம்.

நமது சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள் பெருமை கொள்ளும் வகையில், தோளோடு தோள் நின்று, ஒன்றாக உழைத்து புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றார். அனைத்து கட்சிகள், மாநிலங்கள், வர்த்தகர்களின் பங்களிப்பே ஜிஎஸ்டி வெற்றி பெற காரணம்.

இவ்வாறு பேசினார். 

Trending News