INDIA Bloc Meeting : ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன? முக்கிய சந்திப்பில் பங்கேற்காத 2 தலைவர்கள்!

INDIA Bloc Meeting : நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கு நடந்து முடிந்ததை ஒட்டி, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில், 2 தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.  

Written by - Yuvashree | Last Updated : Jun 6, 2024, 06:14 AM IST
  • இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம்
  • பங்கேற்காத இருவர்
  • நடந்தது என்ன?
INDIA Bloc Meeting : ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன? முக்கிய சந்திப்பில் பங்கேற்காத 2 தலைவர்கள்! title=

INDIA Bloc Meeting : கடந்த 2 மாதங்களாக பரபரப்பாக இருந்த தேர்தல் களம், வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று முடிவடைந்ததை ஒட்டி, இன்னும் சூடு பிடித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது பாஜக. இதனால், முன்னாள் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகியிருக்கிறார். 

முக்கிய கட்சிகளின் கூட்டம்:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம், நேற்று (ஜூன் 5) மாலை நடைப்பெற்றது. இதில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திராவின் புதிய முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பாஜகவில் யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்று கைக்காட்டுவதில் இவர்கள் இருவரும் முக்கிய பங்கு வகித்தனர். கூட்டத்தின் இறுதியில், நரேந்திர மோடிக்கு அவர்கள் ஆதரவு கொடுத்திருப்பதால் வரும் ஜூன் 9ஆம் தேதி, மோடி பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்க படுகிறது. 

இதே போல, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்த, இந்தியா கூட்டணியின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைப்பெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

மல்லிகார்ஜுன கார்கே :

கூட்டத்தின் இறுதியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பத்திரிகை செய்தியை வெளியிட்டார். அதில், இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். பாஜக கட்சியின் வெறுப்பு மற்றும் ஊழல் சார்ந்த அரசியலுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்., இது பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் மற்றும் தார்மீக தோல்வி என்றும் கூறியிருந்தார். 

மேலும் படிக்க | கடிவாளம் போடும் நிதிஷ் குமார்-சந்திரபாபு நாயுடு... கோரிக்கைகளை நிறைவேற்றுமா பாஜக?

மேலும், இந்தியா கூட்டணி மோடியின் தலைமையிலான ஃபாசிச பாஜக அரசுக்கு எதிராக எதிர் கட்சியாக நின்று குரல் கொடுக்கும் என்று அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிட பட்டிருந்தது.  “பா.ஜ.க.வின் ஆட்சி அமையக்கூடாது என்ற மக்களின் விருப்பத்தை உணர்ந்து உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம்” என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. 

பங்கேற்காதவர்கள் 2 கட்சி தலைவர்கள்:

இந்தியா அணியின் கூட்டத்தில், சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்கவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் போட்டியிட்ட உத்தவ் தாக்கரே, 9 தொகுதிகளில் தனித்து நின்று வெற்றி பெற்றிருக்கிறார். அதே போல, மேற்கு வங்காளத்தில் 29 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட மம்தாவும் வெற்றி பெற்றிருக்கிறார். இவர்கள் இருவரும், இந்தியா அணியின் கூட்டத்தில் பங்கேற்காதது, அரசியல் விமர்சகர்களிடையே விவாதத்தை கிளப்பியிருக்கிறது. 

இருவரும் கலந்து கொள்ளாததற்கு தனிப்பட்ட காரணங்கள் இருப்பதாகவும், இவர்கள் சார்பாக கட்சியின் முக்கிய் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | NDA Meeting in Delhi: ஒரே விமானத்தில் நிதிஷ்-தேஜஸ்வி.. பாஜக ஷாக்.. காங்கிரஸ் உற்சாகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News