Lakhimpur Khiri Update: உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறையில் (Lakhimpur Kheri Violence) கொல்லப்பட்டவர்களில் ஒருவரான குர்விந்தர் சிங்கின் இறுதி சடங்குகள் இன்று அதிகாலை நடைபெற்றன. குர்விந்தர் சிங் ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் மீது கார் ஏற்றிய சம்பவ வன்முறையில் கொல்லப்பட்டார். அந்த வன்முறை சம்பவம் நடந்து மூன்று மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது உடல் எரிக்கப்பட்டது. விவசாயி தலைவர் ராகேஷ் திகைத்தை (Rakesh Tikait) சமாதானப்படுத்திய பின்னர், குர்விந்தரின் பிரேத பரிசோதனை மீண்டும் நள்ளிரவில் செய்யப்பட்டது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, அந்த அறிக்கை தவறு என்று கூறி உறவினர்கள் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதன் பிறகு குர்விந்தரின் உடலுக்கு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அக்டோபர் 3 ஞாயிற்றுக்கிழமை, லக்கிம்பூர் கெரியின் டிகோனியாவில் நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு, விவசாயிகளின் குடும்பத்தினர் இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்கு ஒப்புக்கொண்டனர். அவர்கள் 4 பேரின் பிரேத பரிசோதனை திங்கள்கிழமை செய்யப்பட்டது. அந்த நான்கு பேரில், லவ் ப்ரீத் சிங் (19), நக்ஷத்ரா சிங் (65) மற்றும் தல்ஜித் சிங் (42) ஆகியோர் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டனர். ஆனால் குர்விந்தர் சிங்கின் (வயது 22) இறுதிச் சடங்கு நிறுத்தப்பட்டது.
அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், குர்விந்தர் சிங்கின் மரணத்துக்கான காரணம் அதிர்ச்சியும் ரத்தக் கசிவும் தான் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த அறிக்கையை தவறு, குர்விந்தர் உடலில் குண்டு பாய்ந்ததால் தான் அவர் இறந்ததாக குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். குர்விந்தர் சிங்க்கு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்படும் வரை இறுதி சடங்குகள் செய்யப்படாது என்று அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தினர். விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் செவ்வாய்க்கிழமை குர்விந்தரின் குடும்பத்தை நேரில் சென்று பார்த்தார்.
விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய நிர்வாகம் ஒப்புக்கொண்டது. நள்ளிரவு லக்னோவில் இருந்து மருத்துவர்கள் குழு பஹ்ரைச்சிற்கு வந்தது, குர்விந்தரின் பிரேத பரிசோதனை பஹ்ரைச் பிரேத அறையில் மீண்டும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் செய்யப்பட்டது.
இந்த வன்முறையில் 4 விவசாயிகளைத் தவிர, மூன்று பாஜக தொழிலாளர்கள் ஹரி ஓம் (35), ஷ்யாம் சுந்தர் (40) மற்றும் சுபம் மிஸ்ரா (30) மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர் ராமன் காஷ்யப் (28) ஆகியோரும் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் பிரேத பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை இரவிலும், அவர்களின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை செய்யப்பட்டன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR