பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றது முதல், ஒவ்வொரு மாதத்திலும் வரும் கடைசி ஞாயிற்றுக் கிழமையில், மன் கி பாத் என்ற மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் மக்களிடயே உரையாற்றுவது வழக்கம்.
அந்த வகையில் இன்றைய 79வது மன் கீ பாத் (Mann Ki Baat) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:
- ஒலிம்பிக்கில், இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏந்தி இந்திய விளையாட்டு வீரர்கள் வலம் வந்தது பரவச உணர்வை ஏற்படுத்தியது என்று கூறிய பிரதமர் மோடி, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்களின் பெருமைகளை எடுத்துரைத்தார்.
- சென்னை ஐஐடி மாணவர்கள் 3D தொழில்நுட்ப முறையில் மிக குறைந்த செலவில், சில நாட்களில் வீடு கட்டி முடித்ததை குறிப்பிட்டு, லைட் ஹவுஸ் எனும் தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் மிக விரைவாக கட்டிடங்கள் அமைக்கப்படுவது குறித்து குறிப்பிட்டார்.
- குன்னூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி மக்களுக்கு உதவி வரும் குன்னூர் பெண்மணியை பாராட்டிப் பேசினார். மலைப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு இதன் மூலம் உதவி கிடைப்பது மிகவும் போற்றத்தக்கது என்றார்.
- திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளின் போது, கொரோனா இன்னும் முழுமையாக ஒழியவில்லை என்பதை நினைவில் கொண்டு, மக்கள் கொரோனா தொடர்பான நெறிமுறைகளை கடைபிடித்து தொற்றிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
- நாளை கார்கில் விஜய் திவஸ். கார்கில் போர் என்பது நமது ஆயுதப்படைகளின் வீர தீரத்தை பறைசாற்றிய போர். உலகம் இந்தியாவின் வலிமையை உலகம் கண்டது. கார்கில் தொடர்பான செய்திகளை அமைவருக்கு படிக்க வேண்டும் என விரும்புகிறேன். கார்கிலின் துணிச்சலான இதயங்களை நாம் வணக்குவோம்.
ALSO READ | தமிழகத்தில் மீண்டும் லாட்டரியா? தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்: எடப்பாடி பழனிச்சாமி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR