Khel Ratna விருதுக்கு அஸ்வின் & மித்தாலி ராஜை பரிந்துரைத்தது BCCI

ஆடவர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படும் ஆர். அஸ்வின் மற்றும் மகளிர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் மிதாலியின் பெயரை கேல் ரத்னா விருதுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அர்ஜுன் விருதுக்காக தவானை மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 30, 2021, 01:46 PM IST
  • கேல் ரத்னா விருதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், மிதாலி ராஜ் பெயர்கள் பரிந்துரை
  • இது பிசிசிஐ-யின் முன்மொழிவு
  • ராகுல் மற்றும் பும்ராவின் பெயர்கள் ஆர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
Khel Ratna விருதுக்கு அஸ்வின் & மித்தாலி ராஜை பரிந்துரைத்தது BCCI title=

புதுடெல்லி: ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், மிதாலி ராஜ் ஆகியோரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது என   ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. 
மேலும், கே.எல்.ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அர்ஜுனா விருதுக்கு முன்மொழியப்பட்டுள்ளனர்.
 
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ஆர் அஸ்வின் மற்றும் மிதாலி ராஜ் பெயர்களை அனுப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) முடிவு செய்துள்ளது, அர்ஜுனா விருதுக்கு (Arjuna Award) கே.எல்.ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷிகர் தவான் பெயர் பரிந்துரைக்கப்படும். 

விரிவான கலந்துரையாடலுக்கு பிறகு, ஆடவர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படும் ஆர். அஸ்வின் மற்றும் மகளிர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் மிதாலியின் பெயரை கேல் ரத்னா விருதுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அர்ஜுன் விருதுக்காக தவானை மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ராகுல் மற்றும் பும்ராவின் பெயர்கள் ஆர்ஜுனா விருதுக்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  

மித்தாலி ராஜ், உலக பெண்கள் கிரிக்கெட்டிற்கு அடையாளமாக திகழ்பவர். மகளிர் கிரிக்கெட்டில்   நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பல சாதனைகளை படைத்திருக்கிறார் மித்தாலி. இங்கிலாந்தின் சிறந்த கிரிக்கெட்டர் சார்லோட் எட்வர்ட்ஸ். அவருக்கே கடும் போட்டியை ஏற்படுத்தியவர் மித்தாலி. அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 56-வது அரை சதத்தைப் பதிவு செய்தார் மித்தாலி.

2021ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியை நீட்டிக்க இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் (Ministry of Youth Affairs and Sports) முடிவு செய்திருந்தது. முன்னதாக, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 21 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது..

இந்த விருதுக்கு தகுதியான விளையாட்டு வீரர்கள் / பயிற்சியாளர்கள் / நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களின் பரிந்துரைகள் / விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அவை அமைச்சத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

மணிகா பத்ரா, ரோஹித் சர்மா, வினேஷ் போகாட், ராணி ராம்பால் மற்றும் மரியப்பன் பங்கவேலு ஆகியோருக்கு கடந்த ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு தான் முதல்முறையாக ஒரே ஆண்டில் 5 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Tennis: வேடிக்கையாக வார்த்தைகளால் விளையாடி மனதை வென்ற ரோஜர் பெடரர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News