கேரள தங்கக் கடத்தல்: IAS அதிகாரி M. சிவசங்கர் IT செயலர் பதவியில் இருந்து நீக்கம்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தங்க கடத்தல் சம்பவம் தொடர்பாக  IT செயலர் பதவியில் இருந்து IAS அதிகாரி M. சிவசங்கர் நீக்கப்பட்டுள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 7, 2020, 06:52 PM IST
  • திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது
  • தங்க கடத்தல் வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரான ஸ்வப்னா சுரேஷுக்கும் கேரள முதலமைச்சரின் அலுவலகத்திற்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்
  • முன்னாள் தூதரக அதிகாரியான சரித் குமார் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
கேரள தங்கக் கடத்தல்: IAS அதிகாரி M. சிவசங்கர் IT செயலர் பதவியில் இருந்து நீக்கம் title=

கேரளாவில் (Kerala), ஞாயிற்றுக்கிழமை, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் (Thiruvananthapuram international airport)  இராஜீய துறையினரின் சாமான்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த முப்பது கிலோ தங்கம், சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளாவின் தலைநகர்  திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு கொண்டு செல்லப்படும்  உணவுப் பொருட்கள் என்ற பெயரில் தங்கம் கடத்தப்படுகிறது என உளவு தகவல் கிடைத்தது.  இதை அடுத்து, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

ALSO READ | காசி விஸ்வநாதர் பிரசாதம் இனி வீடு தேடி வரும்.... அஞ்சல் மூலம் வழங்க ஏற்பாடு..!!!

இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்பு துறையில் அதிகாராயாக உள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. முன்னதாக, இவர் அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.

 

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தங்க கடத்தல் சம்பவம்  தொடர்பாக, ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரி எம்.சிவசங்கரை IT செயலாளர் பதவியில் இருந்து கேரள அரசு (Kerala government ) செவ்வாய்க்கிழமை நீக்கியது. முகமது ஒய். சஃபிருல்லா புதிய தகவல் தொழில்நுட்ப செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று மாநில  அரசு கூறியது.

தங்க கடத்தல் வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரான ஸ்வப்னா சுரேஷுக்கும் கேரள முதலமைச்சரின் அலுவலகத்திற்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியதை அடுத்து, முன்னதாக, முதல்வருக்கான தலமை செயலர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் தூதரக அதிகாரியான சரித் குமார் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ  |  உண்மையில் நமக்கு  கொரோனா தடுப்பு மருந்து தேவையா... வல்லுநர்களின் கருத்து என்ன...

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ஸ்வப்னா, கேரள அரசின் ஐ.டி துறையில் பணியாற்றி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.  மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ (CBI)  விசாரணை தேவை என்றும் கூறியுள்ளார். பாஜக (BJP) மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், ஸ்வப்னாவைப் பாதுகாப்பதற்கு, முதல்வர் அலுவலகத்திலிருந்து  முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Trending News