ஊரடங்கு உத்தரவு இருக்கும் வரை கேரளாவில் மதுபானம் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை செய்துள்ளது.

தேசிய ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் தனிநபர்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய காரணம், மதுபானம் கிடைக்காததால் எட்டு பேர் தற்கொலை செய்துக்கொண்டததால் தான் என கேரளா அரசு தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 2, 2020, 04:50 PM IST
ஊரடங்கு உத்தரவு இருக்கும் வரை கேரளாவில் மதுபானம் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை செய்துள்ளது. title=

மதுவுக்கு தடை: கேரளாவின் ஆளும் கட்சியான பினராயி விஜயன் அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்பட்டு உள்ளது. கேரள உயர்நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை), மதுவுக்கு  அடிமையானவர்கள்  ஒரு மருத்துவரின் ஆலோசனை பேரில் மது வாங்க அனுமதித்த அரசாங்கத்தின் நடவடிக்கையை நிறுத்த நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் ஷாஜி பி சாலி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் பெஞ்ச் அரசாங்க உத்தரவை "தொந்தரவு" என்றும் "பேரழிவுக்கான செய்முறை" என்றும் கூறியது.

கேரளா அரசின் உத்தரவுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கத்தின் ஆர்வலர்கள், மாநில பிரிவு மருத்துவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை கேரள உயர்நீதிமன்றம்  விசாரித்தது.

திங்களன்று, கேரளாவின் கலால் துறை, அரசாங்க மருத்துவரின் பரிந்துரையுடன் வந்தால், போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் மதுபானங்களை விற்க அனுமதிக்கும் உத்தரவுகளை பிறப்பித்தது.

அரசாங்க உத்தரவுக்கு மருத்துவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு சேய்த்அனர். தேசிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால், மதுபானம் கிடைக்காததால் எட்டு பேர் தற்கொலை செய்துக்கொண்டதால், அதனையடுத்து பினராயி விஜயன் அரசாங்கம் மருத்துவரின் பரிந்துரையுடன் மது வழங்க உத்தரவை போட்டது. 

இன்று நீதிமன்றத்தில், கேரளா அரசு சார்பில், அடிமையானவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் மதுபானம் வழங்க உத்தரவு போடப்பட்டது எனக் கூறியது. ஆனால் நீதிபதிகள் நம்பவில்லை. மது வழங்குவது என்பது ஒரு குழப்பமான முடிவு என நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். இது பேரழிவுக்கான செய்முறையாகும். அடுத்த மூன்று வாரங்களுக்கு இந்த முடிவை செயல்படுத்துவதை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது பெஞ்ச்.

கேரளா அரசாங்கம் ஆரம்பத்தில் மதுபானங்களை ஒரு அத்தியாவசிய சேவையாக வகைப்படுத்துவதன் மூலம் மதுக்கடைகளை திறந்து வைக்க முயன்றது. ஆனால் எதிர்க்கட்சியின் தாக்குதல்களுக்குப் பிறகு பின்வாங்க வேண்டியிருந்தது. பின்னர் ஆன்லைனில் மதுபான விற்பனை மேற்கொண்டது. இதனால் சமூக தொலைதூர விதிமுறைகள் மீறப்படாது.

ஊடரங்கு உத்தரவிடப்படுவதற்கு முன்பு, அரசு நடத்தும் பானங்கள் கார்ப்பரேஷன் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ .40 முதல் 45 கோடி மதிப்புள்ள மதுபானங்களை விற்பனை செய்து வந்தது. 

2018-19 ஆம் ஆண்டில், நிறுவனம் 14,508 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை விற்றது. மதுபானத்திற்கான கலால் வரி மாநிலத்தில் 300 சதவீதம் முதல் 500 சதவீதம் வரை உள்ளது. அதாவது ரூ .100 பாட்டில் ரம் சந்தையில் ரூ .400-500 வரை விற்பனையாகும்.

Trending News