Varanasi: வாரணாசியில் உள்ள ஞான்வபி மசூதிக்கு வெளியே உள்ள நிலத்தின் ஒரு பகுதி காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கபட்டது.
மசூதியை நிர்வகிக்கும் குழு 1,700 சதுர அடி நிலத்தை கோயில் அறக்கட்டளைக்கு வழங்கியது. அதற்கு ஈடாக, அதே மதிப்பில் 1,000 சதுர அடி நிலம் மசூதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
காசி விஸ்வநாதர் கோயில் (Kasi Viswanath Temple) அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் வர்மா, "இரு நிலங்களும் சமமான மதிப்பு உடையவை" என்று பி.டி.ஐ நிறுவனத்திடம் தெரிவித்தார்.
கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலம் வக்ஃப் வாரியத்தின் சொத்தின் ஒரு பகுதியாகும். நிலத்தை வாங்க முடியாது என்பதால், மதிப்புக்கு சமமான ஒரு நிலம் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது, என கோவில் அறக்கட்டளை நிர்வாக அதிகாரி வர்மா மேலும் கூறினார்.
ALSO READ | காசி விஸ்வநாதர் கோயில், ஞானவபி மசூதியில் அகழ்வாராயச்சிக்கு நீதிமன்றம் அனுமதி
இந்த ஆண்டின் ஏப்ரல் மாத தொடக்கத்தில், காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் ஞானவபி மசூதி வளாகம் குறித்த அகழ்வாராய்ச்சியை நடத்த இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்திற்கு (ASI) வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
ஞானவாபி மசூதி இருக்கும் நிலத்தை இந்துக்களுக்கு மாற்றுமாறு கோரி வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
1664 ஆம் ஆண்டில் முகலாய பேரரசர் அரங்கசீப், காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்து விட்டு, அதன் மீது இந்த மசூதி கட்டியுள்ளார் என மனுதாரர் கூறினார்.
முன்னதாக, நடைபெற்ற வழக்கில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், ஞானவபி மசூதிக்கும் இடையிலான சர்ச்சை தொடர்பான வழக்கில், வாரணாசி நீதிமன்றத்தில், 351 ஆண்டுகள் கால உண்மைகளை விவரிக்கும் சில வரலாற்று சிறப்பு மிக்க முக்கியமான பல ஆவணங்களை இந்து தரப்பினர் சமர்ப்பித்தனர்.
ஞானவாபி வளாகத்தை ஆய்வு செய்யக் கோரும் மனுவுக்கு எதிராக 2020 ஜனவரியில் அஞ்சுமான் இன்டெசாமியா மஸ்ஜித் குழு ஆட்சேபனை தாக்கல் செய்திருந்தது.
காசி விஸ்வநாதர் ஆலயத்தின் சுயம்பு ஜோதிர்லிங்கம் ஞானவபி வளாகத்தில் இருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். அதனால், அந்த வளாகத்தை அகழ்வாராய்ச்சி செய்ய விரும்புகிறார்கள். அதே நேரத்தில் முஸ்லிம்கள் அந்த இடத்தில் கோயில் இல்லை என மறுக்கின்றனர்.
ALSO READ | காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்... வழக்கு விபரங்கள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR