NEET தேர்வை தவறவிட்டவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு...

போனி புயலால் ஒடிசாவில் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : May 6, 2019, 07:32 PM IST
NEET தேர்வை தவறவிட்டவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு... title=

போனி புயலால் ஒடிசாவில் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

வங்க கடலில் மையம் கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து ஆந்திராவின் சில மாவாட்டங்கள் உள்பட ஒடிசா மாநிலத்தை சேதம் செய்தது. இந்த புயலுக்கி போனி புயல் என பெயரிடப்பட்ட நிலையில், போனி புயல் பாதிப்பால் அம்மாநிலத்தில் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. 

ஒடிசாவில் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு ஆனது வரும் 20-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் இத்தேர்வுடன் கர்நாடகத்தில் ரெயில் தாமதத்தால் நீட் தேர்வை தவறவிட்ட சுமார் 600 பேருக்கு அன்று மறுவாய்ப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதற்காக கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, தார்வார், பெலகாவி, தாவணகெரே, மங்களூரு, உடுப்பி ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

பெங்களூருவில் உள்ள மையங்களில் நீட் தேர்வு எழுதுவதற்காக பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 600 மாணவ–மாணவிகள் பல்லாரி நகரில் இருந்து ஹம்பி ரெயிலில் புறப்பட்டனர். 

நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு புறப்படவேண்டிய அந்த ரெயில் 4 மணி நேரம் தாமதமாக இரவு 2 மணியளவில் புறப்பட்டது. இருப்பினும் வேறு வழியின்றி அந்த ரெயிலில் மாணவ-மாணவிகள் பயணித்தனர்.

அந்த ரெயில் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது சிக்னல் கிடைக்காமல் திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டது. சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகுதான் ரெயில் அங்கிருந்து கிளம்பியது.

நேற்று மதியம் ஒரு மணியளவில்தான் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த மாணவ-மாணவிகள், ரெயிலில் இருந்து இறங்கினர். பின்னர் அவர்கள் ரெயிலை சிறைபிடித்து என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில் நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாணவ–மாணவிகளும் அவர்களுடன் வந்த பெற்றோரும் அங்கிருந்து பஸ்கள், கார்கள் மூலம் அவசர, அவசரமாக பெங்களூருவுக்கு வந்தனர். இருப்பினும் அவர்களால் குறித்த நேரத்திற்குள் வந்து சேர முடியவில்லை. இதன் காரணமாக மாணவ-மாணவிகளால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது.

தேர்வு எழுத முடியாத மாணவ-மாணவிகள் சிலர் தங்களுடைய நிலை குறித்து, மத்திய ரெயில்வே அமைச்சருக்கு டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்தனர். மேலும், தாங்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத நடவடிக்கை எடுத்து உதவுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், போனி புயலால் ஒடிசாவில் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறும் நிலையில் கர்நாடகத்தில் ரெயில் தாமதத்தால் நீட் தேர்வை தவறவிட்ட சுமார் 600 பேருக்கு அதே நாளில் மறுவாய்ப்பு அளிக்கப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்

Trending News