காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்க வாய்ப்பில்லை -கர்நாடகா!

காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்க வாய்ப்பில்லை என கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளது.

Last Updated : Mar 9, 2018, 07:27 AM IST
காவிரி நீர் தமிழகத்துக்கு கிடைக்க வாய்ப்பில்லை -கர்நாடகா! title=

நேற்று கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தின் முடிவில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்க்கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 

மேலும், தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீர், கடந்த டிசம்பர் மாதமே வழங்கி முடித்து விட்டதாகவும், அதனால் மேலும் நீர் திறந்து விட தேவையில்லை என்றும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

மேலும், 6 மாதங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Trending News