பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் நடிக்கும் வீரமாதேவி படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் போராட்டர் நடத்தி வருகின்றனர்!
அடல்ட் மூவி எனப்படும் ஆபச திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். அடல்ட் நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் தலைப்பாக மாறியுள்ளார்.
காரணம் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தற்போது தொப்பாளராக அசத்தி வருகின்றார். அதே வேலையில் தமிழ், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வரும் வீரமதேவி திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
Karnataka: Members of pro-Kannada organisation, Karnataka Rakshana Vedike, protest in Bengaluru against actor Sunny Leone being cast in an upcoming Tamil film Veeramahadevi. pic.twitter.com/2f476oT3j8
— ANI (@ANI) October 8, 2018
இந்த காரணங்களால் இவது பெயர் இணையத்தில் வைரலாகிறதோ இல்லையோ... இவர் நடித்துவரும் வீரமாதேவி திரைப்படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால் சன்னியின் பெயர் தற்போது வைரலாகியுள்ளது எனலாம்.
பாலிவுட்டில் துவங்கி கர்நாடகா வரை இவருக்கு எதிராக தற்போது எதிர்ப்பு கொடி எழுந்துள்ளது. ஆபாச நடிகையாக இருந்து தற்போது பாலிவுட்டில் கலக்கி வரும் இவரை எதிர்த்து சமீபத்தில் இந்தி நடிகைகள் சன்னிலியோனை நாடு கடத்த வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினர்.
இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் கொண்ட பேனர்களை மும்பை வீதிகளில் வைத்ததற்கு எதிர்ப்பு கிளம்பி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. பெங்களூருவில் பிரபல ஓட்டல் ஒன்றி இவர் பங்கேற்கவிருந்து நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதால், நிகழ்ச்சிக்கே தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இவர் நடித்து வரும் வீரமாதேவி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகவின் பெங்களூருவில் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் போராட்டர் நடத்தி வருகின்றனர். தனது ஆபாச நடிகை என்னும் பிம்பத்தினை உடைக்கவே இவர் இந்த படத்தில் நடித்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்!