குடகு மாவட்டத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அளித்த நிர்மலா சீதாராமன்

கர்நாடகா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 24, 2018, 04:21 PM IST
குடகு மாவட்டத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அளித்த நிர்மலா சீதாராமன் title=

கர்நாடகா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த மலையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால், அந்த மாவட்டத்தில் வசித்து வந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பல கிராமங்களில் நிலச்சரிவு ஏற்ப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. 

தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால், மீட்பு பணி விரைந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக் மாநில முதல் அமைச்சர் குமாராசாமி, எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா மற்றும் முன்னால் முதல்வர் சித்தராமையா போன்றோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், இன்று பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்தை ஆய்வு செய்ய இந்திய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் சென்றடைந்தார். வெள்ள நிவாரண பணிகளை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது, 

சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நித்யானந்த் கெட்கரி பேசியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். விரைவில் மாநிலத்தில் சேதமடைந்த சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சுமார் 110 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலையும் மற்றும் சுமார் 1,500 கிமீ நெடுஞ்சாலையும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. குடகு, மங்களூரு, ஹசான், சிக்மகலுரு, மசாரு, சாமர்ஜாகர், கோலார், சிகாபாபால்பூரா மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளன. 

 

நான் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நித்யன் காட்காரி சந்திப்பேன், பாதிக்கபட்ட சாலையைப் பற்றி விவாதிப்பேன். கர்நாடகாவில் ஏற்ப்பட்டுல் பாதிப்புகளை குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்து கூறுவேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சீர்செய்ய இராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

"நான் ராஜ்யசபா எம்.பி.யாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதால், எனது எம்.பி. நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு கொடுக்கிறேன் எனவும் கூறினார்.

 

Trending News