உச்சக்கட்ட நம்பிக்கையில் காங்கிரஸ்... ஜேடிஎஸ் உடன் கூட்டணி? - கார்கேவின் பதில் இதுதான்!

Karnataka Election Results 2023: கர்நாடக தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தற்போது தெரிவித்த கருத்து காங்கிரஸின் நிலைப்பாட்டை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 12, 2023, 09:48 PM IST
  • கர்நாடகாவில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
  • தொங்கு சட்டப்பேரவை அமைய அதிக வாய்ப்பு என கூறப்படுகிறது.
  • 2018இல் எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெறவில்லை.
உச்சக்கட்ட நம்பிக்கையில் காங்கிரஸ்... ஜேடிஎஸ் உடன் கூட்டணி? - கார்கேவின் பதில் இதுதான்! title=

Karnataka Election Results 2023: கர்நாடக தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தொங்கு சட்டசபை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இருப்பிலும், அதில் காங்கிரஸ் கட்சி தான் அதிக தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படும் நிலையில், மூன்றாவது கட்சியாக வரக்கூடும் என கணிக்கப்படும் ஹெச்.டி.குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை அணுகுவதாக வந்த தகவல்களை காங்கிரஸ் மறுத்தது.

எல்லாம் எண்ணிக்கையின் கையில்...

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தனது கட்சி அமோக பெரும்பான்மையை வெல்லும் என்றும், நாளை வெல்லும் தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் அதன் நகர்வுகளை முடிவு செய்வோம் என்றும் கூறினார்."என்ன செய்வது என்று எண்கள் (தொகுதிகளின் எண்ணிக்கை) நமக்குத் தெரிவிக்கும்," என்று கார்கே கூறியிருந்தார்.  

"ஆபரேஷன் லோட்டஸ்" சாத்தியமா என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். எம்.எல்.ஏ.க்களை மாற்றத் தூண்டுவதன் மூலம் அதிகாரத்தைப் பெறுவதற்கான பாஜகவின் உத்தி என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டிற்கு பயன்படுத்தும் சொல் தான் 'ஆபரேஷன் லோட்டஸ்'. 

ஜேடிஎஸ் கிங் மேக்கர்?

யாருடன் கூட்டணி வைப்பது என்று கட்சி முடிவு செய்துவிட்டதாக ஜேடிஎஸ் தலைவர் கூறியிருந்தார். ஆனால், இதற்கு பதில் அளித்த கார்கே, ஜேடிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நாங்கள் நடத்தவில்லை என் அதனை மறுத்தார். 

மேலும் படிக்க | நாளை வாக்கு எண்ணிக்கை! கர்நாடக தேர்தல் முடிவை எப்போது, எங்கே, எப்படி தெரிந்து கொள்வது?

புதன்கிழமை வெளியான தேர்தலுக்கு பின்னான கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பல கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன. இருப்பினும், ஒரு மாறுப்பட்ட முடிவு வெளியாகலாம் என கூறப்படுகிறது. மேலும், இது ஜேடிஎஸ் கிங் மேக்கராக மாறுவதற்கு வழிவகுக்கிறது. 

2018 நிலைமை?

2018இல், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ் கூட்டணி ஆட்சியை அமைத்தது. பின்னர், 14 மாதங்களுக்குப் பிறகு அந்த கூட்டணி உடைந்து, பாஜக ஆட்சி அமைத்தது. 

ஜேடிஎஸ் தலைவர் ஒருவர், காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரு கட்சிகளிடம் இருந்தும் கட்சிக்கு நல்ல தீர்வு கிடைத்ததாகவும், ஒரு முடிவு எடுக்கப்பட்டதாகவும் நேற்று (மே 11) கூறினார். இது பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி பற்றிய கடுமையான ஊகங்களை ஏற்படுத்தியது.

கருத்தும் மறுப்பும்

இந்த கருத்தை ஜேடிஎஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி தெரிவிக்கவில்லை. சிங்கப்பூரில் உள்ள தன்வீர் அகமது இதனை தெரிவித்துள்ளார். தன்வீர் அகமது கூறுகையில்,"முடிவு செய்தாகிவிட்டது, அது இறுதி செய்யப்பட்டுவிட்டது. சரியான நேரத்தில் அதை பொதுமக்களுக்கு அறிவிப்போம்," என்றார். இருப்பினும், கர்நாடக ஜேடிஎஸ் தலைவர் முதல்வர் இப்ராகிம் அகமதுவின் அறிக்கையை மறுத்து, "அவர் எங்கள் செய்தித் தொடர்பாளர் அல்ல" என்று கூறினார்.

காங்கிரஸ் நம்பிக்கை

224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், 113 பெரும்பான்மையான இடங்களில் 150 இடங்களில் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கும் என்றும், ஜேடிஎஸ் உடன் பா.ஜ.க இணக்கமாக இருப்பது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

"ஜேடி-எஸ் மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை இல்லை. நாங்கள் தனித்து ஆட்சி அமைப்போம். அவர்கள் பேசட்டும். அவர்களின் பேச்சு குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | கர்நாடக தேர்தல் 2023: 10 விஐபி வேட்பாளர்கள் அவர்கள் போட்டியிடும் தொகுதிப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News