நீதிபதிகள் சமரசம் விருந்து: அதிருப்தி நீதிபதிகள் 3 பேர் சந்திப்பு!!

ஜனநாயகம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் குற்றம்சாட்டியிருந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை அதிருப்தி நீதிபதிகள் 3 பேர் சந்தித்து பேசினர்.

Last Updated : Jan 17, 2018, 03:45 PM IST
நீதிபதிகள் சமரசம் விருந்து: அதிருப்தி நீதிபதிகள் 3 பேர் சந்திப்பு!! title=

ஜனநாயகம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் குற்றம்சாட்டியிருந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை அதிருப்தி நீதிபதிகள் 3 பேர் சந்தித்து பேசினர்.

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா கடந்த ஆகஸ்ட்- 8-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென போர்க்கொடி உயர்த்தினர். வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்துள்ள இந்த நீதிபதிகளின் மோதல் போக்கு, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. 

இதனையடுத்து நீதிபதிகளுக்குள் சமரசம் செய்வதற்காக 7 பேர் கொண்ட குழுவை இந்திய பார் கவுன்சில் அமைத்தது. இக்குழு, தலைமை நீதிபதியையும், அதிருப்தி நீதிபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து நேற்று, அதிருப்தி நீதிபதிகள் 4 பேரும் தலைமை நீதிபதியை சந்தித்து 15 நிமிடங்கள் பேசினர்.

நீதிபதிகள் இடையேயான பிரச்னை தீர்க்கப்பட்டதற்கு அடையாளமாக இன்று, பொது விருந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மூத்த நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மதிய உணவு இடைவேளையின் போது அதிருப்தி நீதிபதிகளான குரியன் ஜோசப், ரஞ்சய் கோகாய், மதன் பி. லோகூர் ஆகிய மூவரும் தீபக் மிஸ்ராவை சந்தித்தனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டதால் நீதிபதி செல்லமேஸ்வர் சந்திக்கவில்லை. இவர்களது சந்திப்புக்கான காரணம் தெரியவில்லை. நீதிபதிகளை சமாதானப்படுத்தும் நடவடிக்கையாக இருக்கலாம் என தெரிகிறது.

Trending News