புது தில்லி: ஜே.என்.யூ வன்முறை குறித்து டெல்லி போலீசார் இன்று (வெள்ளிக்கிழமை) முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். ஜே.என்.யுவில் வளாகத்தில் வன்முறை செய்த 9 முகமூடி அணிந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டி.சி.பி (க்ரைம்) ஜாய் டிர்கி தெரிவித்தார். அதில் 7 மாணவர்கள் இடதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் 2 மாணவர்கள் வலதுசாரியை சேர்ந்தவர்கள். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களின் புகைப்படத்துடன் பட்டியல் வெளியிடப்பட்டது.
தகவல்களை அளித்த டி.சி.பி டிர்கி கூறியது, "ஜனவரி 1 ஆம் தேதி முதல் 5 வரை ஆன்லைனில் பதிவு செய்ய ஜே.என்.யூ நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் ஆன்லைன் போர்டல் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 அமைப்புகள் போராட்டம் செய்தனர். அந்த அமைப்பு முதல் பழைய பிரச்சனைகளை முதலில் தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி முதல் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதனால் ஆன்லைன் போர்டல் மானவர்க;மாணவர்கள் பதிவு செய்ய அந்த அமைப்பு அனுமதிக்கவில்லை. அதையும் மீறி பதிவு செய்த மாணவர்களை, அந்த அமைப்பினர் அச்சுறுத்தினர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சர்வர் அறைகளை அடித்து நொறுக்கியதாகவும், அங்கிருந்த ஊழியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும் ஜேஎன்யூ அதிகாரிகள் தெரிவித்ததாக டெல்லி போலீஸ் கூறினார்.
மேலும் பேசிய டி.சி.பி டிர்கி, முகமூடி அணிந்துக்கொண்டு தாக்கி உள்ளனர். அவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட போது, அந்த விடுதி அறையில் உள்ள வைஃபை சி.சி.டி.வி கேமரா வேலை செய்யவில்லை என்றும் கூறினார்.
"5 ஆம் தேதி 11.30 மணிக்கு ஒரு தாக்குதல் சம்பவமும், அதேபோல பிற்பகல் 3:45 மணிக்கு பெரியார் விடுதியும் தாக்கப்பட்டது. இதுக்குறித்து வாட்ஸ்அப், சிசிடிவி காட்சிகள் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வைஃபை முடக்கப்பட்டதால் சி.சி.டி.வி உதவி பெற முடியவில்லை. தற்போது அடையாளம் காணப்பட்ட நபர்களை குறித்த தகவல், வைரலான வீடியோக்கள், மாணவர்கள் எடுத்த வீடியோ மற்றும் நிர்வாகத்தின் உதவியுடன் கிடைத்தது. ஜே.என்.யூ ஆசிரியர் சங்கம் மற்றும் அங்கிருந்த மாணவர்கள் காவல்துறை நிர்வாகத்திற்கு உதவினர் எனக் கூறியுள்ளார்.
டெல்லி காவல்துறையினரின் கூற்றுப்படி, "வன்முறையில் அடையாளம் காணப்பட்ட மாணவர்களில் சுஞ்சுன் குமார் முன்னாள் மாணவர் ஜே.என்.யூ, பங்கஜ் மிஸ்ரா, வாஸ்கர் விஜய், இஷி கோஷ், சுசேதா தாலுக்தார், பிரியா ரஞ்சன், யோகேந்திர பரத்வாஜ், டோலன் சமந்தா, விகாஸ் படேல் ஆகியோர் அடங்குவர். இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும் எனவும் போலீசார் தெரிவத்தனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.