ஜம்மு - காஷ்மீர் புல்வாமாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்!
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் CRPF வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது. இதையடுத்து, தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி, கொடுத்தது. இதை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்திய -பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை நமது ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட ட்ரால் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.
#IndianArmy#OpPinglish, Tral (Pulwama). Three terrorists killed. Joint operations in progress.@adgpi@PIB_India @SpokespersonMoD @crpfindia @JmuKmrPolice
— NorthernComd.IA (@NorthernComd_IA) March 11, 2019
இதையடுத்து, அந்த இடத்தை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தீவிரவாதிகளும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கு இடையே விடிய, விடிய நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சில தீவிரவாதிகள் அங்கு பதுங்கி இருக்கின்றார்களா என தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார். மேலும், அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கி பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.