காத்துவாக்குல 2 கல்யாணம் - ஒரே நேரத்தில் 2 காதலிகளுக்கு தாலி கட்டிய ரோமியோ!

ஜார்கண்ட் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை ஊருக்கு முன் திருமணம் செய்துகொண்டுள்ளார்.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jun 21, 2022, 06:23 PM IST
  • ஒருவரைவிட்டு மற்றொருவருடன் தன்னால் வாழமுடியாது என போராடிய இளைஞர்
  • இவரது இந்த முடிவுக்கு அந்தப் பெண்களோ, பெற்றோர்களோ எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
காத்துவாக்குல 2 கல்யாணம் - ஒரே நேரத்தில் 2 காதலிகளுக்கு தாலி கட்டிய ரோமியோ! title=

ஜார்கண்ட் மாநிலம், லொஹர் பகுதியில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் சந்தீப் ஒரேன். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். பெரும்பாலும் செங்கல் சூளையில் பணிபுரியும் இவர், அவ்வப்போது பக்கத்து ஊர்களில் கட்டுமான பணிகள் இருப்பின் அங்கு சென்று பணி புரிந்து வருவார்.

இவ்வாறு இருக்க, இவரும் குசும் லக்ரா என்ற பெண்ணும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் இவர் வழக்கம்போல் பணிக்கு சென்று வந்துக்கொண்டிருந்தார். கடந்த சில நாட்களாக சந்தீப் இரவு நேரங்களில் வீட்டிற்கு தாமதமாக வரத்தொடங்கியுள்ளார். இதனால் குசும்-க்கும் சந்தீப்-க்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வந்தது.

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

இதற்கிடையில் சந்தீப் தான் பணிபுரியும் இடத்தில் சுவாதி குமாரி என்ற இளம்பெண்ணுடன் பழக்கத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் பணி முடிந்த பிறகு சுவாதியை சந்திக்கச் சென்றுவிடுவார்.

இதன் காரணமாகத்தான் அவர் தன் வீட்டிற்கு தாமதமாக வந்துக்கொண்டிருந்தார் என்பது குசும்-க்கு தெரியாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், சுவாதியின் ஊர்காரர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் சந்தீப்பின் நடவடிக்கையை கண்காணித்து வந்துள்ளனர். இரு பெண்களிடமும் வெகு நாட்களாக நம்ப வைத்து நாடகமாடி வந்த சந்தீப்பை ஒரு நாள் ஊர்மக்கள் பிடித்து பஞ்சாயத்தை திரட்டினர்.

பஞ்சாயத்தின்போது இரு பெண்களும் , மூவரின் வீட்டோரும் கூடி இருந்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் மறுப்பு தெரிவிக்காத சந்தீப், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் பட பாணியில் சந்தீப் சில ரசிக்கதக்க வசனங்களையும் எடுத்துவிட்டுள்ளார்.

அவர், இரண்டு பெண்களையும் சமமாக காதலிப்பதாகவும், ஒருவரைவிட்டு மற்றொருவருடன் தன்னால் வாழமுடியாது என்றும் பேசி அனைவரிடமும் சம்மதமும் பெற்றுள்ளார்.

அதன்பின்னர் சந்தீப் - குசும் மற்றும் சுவாதியை ஒரே நாளில் திருமணம் செய்துகொண்டார். இவரது இந்த முடிவுக்கு அந்தப் பெண்களோ, பெற்றோர்களோ எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது சிறப்பம்சம்.

மேலும் படிக்க | குழந்தையை தண்ணீரில் விழாமல் பார்த்துக்கொள்ளும் நாயின் வீடியோ வைரல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News