இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தத்திற்கு தயாரானது ஜப்பான், சீனாவுக்கு எதிராக வலுக்கும் கூட்டணி!!

மோதி அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான மற்றொரு வெற்றி கிடைத்துள்ளது. சீனாவுக்கு எதிராக, இந்தியாவுடன் ரகசிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஜப்பான் தயாராகியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 4, 2020, 11:49 AM IST
  • பாதுகாப்பு உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள, ஜப்பான் தன் சட்டத்தில் சில திறுத்தங்களைச் செய்துள்ளது.
  • கடந்த சில காலங்களாக, சீனா, தென்சீனக்கடலில் தன் ஆதிக்கத்தை அதிகரிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
  • ஜப்பான் கடந்த ஆண்டுகளில் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் மற்றும் சட்டங்களில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தத்திற்கு தயாரானது ஜப்பான், சீனாவுக்கு எதிராக வலுக்கும் கூட்டணி!! title=

மோதி அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான மற்றொரு வெற்றி கிடைத்துள்ளது. சீனாவுக்கு (China) எதிராக, இந்தியாவுடன் ரகசிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஜப்பான் (Japan) தயாராகியுள்ளது. பாதுகாப்பு உளவுத்துறைத் (Defence Intelligence) தகவல்களைப் பகிர்ந்துகொள்ள, ஜப்பான் தன் சட்டத்தில் சில திறுத்தங்களைச் செய்துள்ளது. இந்தத் திருத்தத்துடன், ஜப்பான், அமெரிக்காவைத் தவிர, இந்தியா (India), ஆஸ்திரேலியா (Australia) மற்றும் இங்கிலாந்துடனும் (UK) தன் பாதுகாப்பு உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்ளும்.

ஒரு ரகசிய சட்ட அமலாக்கத்தின் மூலம், ஜப்பான், இந்த ஏற்பாட்டை கடந்த மாதம் செய்தது. இதற்கு முன்பு அமெரிக்காவுடன் மட்டும்தான் ஜப்பான் பாதுகாப்புத் தகவல்களை பகிர்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற நாட்டு ராணுவத்திடமிருந்து கிடைக்கும் தகவல்களை சேகரித்து பயன்படுத்துவதன் மூலம், ஒன்றிணைந்த பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் மேம்பாட்டில் உதவி கிடைக்கும். மேலும், சீன படைகளின் நடமாட்டம் குறித்த தகவல்களை சேகரிப்பதிலும் இதன் மூலம் உதவி கிடைக்கும். ஜப்பானின் இந்த நடவடிக்கை அதற்கும் லாபகரமானதாக இருக்கும். ஏனென்றால், தென் சீனக் கடலில் சீனா தொடர்ந்து ஜப்பானை அச்சுறுத்தியும் சீண்டியும் வருகிறது. சீன நடமாட்டத்தை கண்காணிப்பது ஜப்பானுக்கும் கடினமாகி விட்டது.

கடந்த சில காலங்களாக, சீனா, தென்சீனக்கடலில் தன் ஆதிக்கத்தை அதிகரிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜப்பானின் ஆட்சியின் கீழ் உள்ள சேங்காகு தீவுகளின் (Senkaku Islands) அருகில், சீன கப்பல்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ரகசிய ஒப்பந்தம் மூலம், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளிடமிருந்து ஜப்பானிற்கு உதவி கிடைப்பதோடு, பாதுகாப்பு தொடர்பான உளவுத் தகவல்களின் பகிர்வும் எளிதாக நடக்கும்.

Also Read: China: வெள்ளதால் சீரழியும் சீனாவில் IV நிலை அவசரகால எச்சரிக்கை அறிவிப்பு

சீனாவினால் அதிகரிக்கும் ஆபத்துகளை கருத்தில்கொண்டு, ஜப்பான் கடந்த ஆண்டுகளில் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் மற்றும் சட்டங்களில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு முதன் முறையாக ஜப்பானின் தற்காப்புப் படைகளும் ஆஸ்திரேலிய ராணுவமும், போர் விமானங்களுடன்  கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டன. 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும், ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படை, மலபாரில், இந்திய-அமெரிக்க படைகளுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் (Joint Drill) ஈடுபட்டு வருகிறது.

Also Read: ரஷ்யாவின் Vladivostok நிறுவக கொண்டாட்டத்தால் சீனா எரிச்சல்... காரணம் என்ன...

Trending News