ஜன்ஜாதிய விகாஸ், ஆகஸ்ட் 5, 2023: பழங்குடி சமூகத்தின் பெருமைகளை கொண்டாடும் நிகழ்வு

Janjatiya Vikas: 'ஜன்ஜாதிய விகாஸ்' முன்முயற்சி, கலாச்சார அமைச்சகத்தின் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் கீழ் ஜீ மீடியாவுடன் இணைந்து நடத்தப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 3, 2023, 01:10 PM IST
  • புது தில்லியில் நடைபெறும் இந்தியாவின் பழங்குடியினர் பாரம்பரியக் கொண்டாட்டம்.
  • இந்த நிகழ்ச்சி கலாச்சார அமைச்சகத்தின் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் கீழ் ஜீ மீடியாவுடன் இணைந்து நடத்தப்படுகிறது.
  • பல டிஜிட்டல் மற்றும் ஆன் கிரவுண்ட் அம்சங்களும் பிரச்சாரத்தை ஒரு வெற்றிகரமான நிகழ்வாக மாற்றுவதில் பங்களிக்கும்.
ஜன்ஜாதிய விகாஸ், ஆகஸ்ட் 5, 2023: பழங்குடி சமூகத்தின் பெருமைகளை கொண்டாடும் நிகழ்வு title=

புது டெல்லி: ஆகஸ்ட் 5, 2023 அன்று இந்தியா கேட், புது தில்லியில் நடைபெறும் இந்தியாவின் பழங்குடியினர் பாரம்பரியக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவும்: 'ஜன்ஜாதிய விகாஸ்' முன்முயற்சி, கலாச்சார அமைச்சகத்தின் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் கீழ் ஜீ மீடியாவுடன் இணைந்து நடத்தப்படுகிறது.

பழங்குடியினருக்கான அதிகாரமளித்தல் என்பது ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் முதன்மை அம்சங்களில் ஒன்றாகும். இது பழங்குடியினரின் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல், உள்ளடக்கிய வளர்ச்சி, வாழ்வாதார வாய்ப்புகள், கல்வி, சுகாதாரம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. ஜீ மீடியாவுடன் இணைந்து, கலாச்சார அமைச்சகத்தின் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ், முழு பழங்குடி சமூகத்தின் மேம்பாடு மற்றும் அதிகாரமளிப்பதற்கான அதன் முதல் வகையான 360-டிகிரி பிரச்சாரமான 'ஜன்ஜாதிய விகாஸ்' -ஐ தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 

இந்தியாவின் பழங்குடி சமூகங்களின் நெகிழ்வுத்தன்மை, முன்னேற்றம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்டாடும் நோக்கத்தில், ஜீ மீடியா, ஆகஸ்ட் 5, 2023 அன்று, சென்ட்ரல் விஸ்டா, இந்தியா கேட்டில், மாலை 7 மணிக்குப் பழங்குடியினரின் கலாச்சார இரவை ஏற்பாடு செய்கிறது. இந்த மாபெரும் விழா பழங்குடியினரின் இசை, நடனம் மற்றும் பேஷன் ஷோ ஆகியவற்றின் கலவையாக இருக்கும். அற்புதமான கண்கவர் பேஷன் ஷோ பழங்குடியின ஆடை அற்புதங்களை வெளிக்காட்டும். இந்த ஆன்-கிரவுண்ட் நிகழ்வு, பழங்குடி சமூகங்களின் வளமான கலாச்சாரத்தை வலியுறுத்தும் ஒரு வழிவகையாக செயல்படும். சமூகம், பழங்குடியினரின் சுய உதவிக்குழுக்கள், ஏஜென்சிகள் மற்றும் அமைப்புகளை வெகுஜன மக்களுடன் இணைக்க இது உதவும். 

‘ஜன்ஜாதிய விகாஸ்’ முன்முயற்சியின் மூலம், பழங்குடி சமூகங்களின் சொல்லப்படாத போராட்டக் கதைகளை முன்னிலைப்படுத்தவும், இந்தியாவை கலாச்சார வளமிக்க நாடாக மாற்றுவதில் இளைஞர்கள் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கவும், அவர்களை ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பல டிஜிட்டல் மற்றும் ஆன் கிரவுண்ட் அம்சங்களும் பிரச்சாரத்தை ஒரு வெற்றிகரமான நிகழ்வாக மாற்றுவதில் பங்களிக்கும்.

இந்த முக்கிய முயற்சியைப் பற்றி பேசுகையில், இந்திய அரசின் கலாச்சாரத் துறைக்கான மாண்புமிகு அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் ராம் மேக்வால், “‘ஜனஜாதிய விகாஸ்’ பிரச்சாரமானது, ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்திற்கும் அதிகாரமளிக்கும் நோக்கில் இந்திய குடிமக்களை ஈடுபடுத்தும் ஒரே நோக்கத்துடன் கருத்தாக்கப்பட்டுள்ளது. பழங்குடியின சமூகம் நமது சமூகத்தில் ஒரு ஒருங்கிணைந்த பங்கை வகிப்பதால், இந்தியாவின் புகழ்பெற்ற பழங்குடி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் முன்வர வேண்டும்.’ என தெரிவித்தார்.

இந்தியாடாட்காம் டிஜிட்டல் பிரைவேட் லிமிடெட்டின் சிஆர்ஓ, திரு. ஸ்ரீதர் மிஸ்ரா, "'ஜன்ஜாதிய விகாஸ்' பிரச்சாரத்தின் துவக்கத்தின் மூலம், பழங்குடியின சமூகத்தின் உறவை வலுப்படுத்துவதையும், தேசத்துடன் இணைப்பதையும் ஜீ மீடியா நோக்கமாக கொண்டுள்ளது. இந்த தனித்துவமான முன்முயற்சிக்கு 360 டிகிரி மார்க்கெட்டிங் அணுகுமுறையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இதன் மூலம் இந்தியாவின் பழங்குடி சமூகங்களின் நெகிழ்வுத்தன்மை, முன்னேற்றம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்டாடுவதில் குடிமக்கள் தீவிரமாக பங்கேற்க ஊக்குவிக்கிறோம்.” என மேலும் கூறினார், 
  
பழங்குடியினரின் பாரம்பரியம் மற்றும் அவர்களின் பண்டைய மரபுகள், வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியைக் காண தயாராகுங்கள்.

இந்தியாடாட்காம் டிஜிட்டல் பிரைவேட் லிமிடெட்

இந்தியாடாட்காம் டிஜிட்டல் பிரைவேட் லிமிடெட் (முன்னர் ஜீ டிஜிட்டல்) இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மீடியா வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். IDPL இன் தனித்துவமான டிஜிட்டல் தளங்கள் 32 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் ப்ராபர்டிகளுடன், உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் இணையதளங்கள் மற்றும் செயலிகளில் ஒன்றாக உள்ளது.

மேலும் படிக்க | ஞானவாபி மசூதி வழக்கு... அகழ்வாய்விற்கு அனுமதி வழங்கி உத்தரவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News