இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு ஜாக்பாட், முக்கிய தகவல் வெளியீடு

Free Ration Update: ஹோலிக்கு முன்னதாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ரேஷன் வழங்கப்படும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 21, 2023, 04:18 PM IST
  • ரேஷன் கார்டு புதிய விதிகள்.
  • உங்களுக்கு இரண்டாவது முறை ரேஷன் கிடைக்கும்.
இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்,  முக்கிய தகவல் வெளியீடு title=

Free Ration Update: ஹோலிக்கு முன்னதாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ரேஷன் வழங்கப்படும். மேலும் இந்த ரேஷன் விநியோகம் பிப்ரவரி 20 முதல் தொடங்கி பிப்ரவரி 28 வரை நடைபெறும். இதனுடன், NFSA இன் கீழ் இந்த ஆண்டு முழுவதும் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் விநியோகமும் மீண்டும் வழங்கப்படும்.

ஏழை மக்களின் நிதிச் சுமையைக் குறைக்க, NFSA-ன் கீழ் ஆண்டு முழுவதும் இலவச ரேஷன் பொருள் விநியோகத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ரேஷன் விநியோகம் தாமதமாக நடக்கிறது. அதாவது டிசம்பர் மாத ரேஷன் ஜனவரியிலும், ஜனவரி மாத ரேஷன் பிப்ரவரி மாதத்திலும் வழங்கப்பட்டது. அந்த வகையில் தற்போது பிப்ரவரி மாதத்துக்கான இலவச ரேஷன் பொருட்களை பிப்ரவரி மாதமே வழங்க உத்தரபிரதேச அரசு மிகப்பெரிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க | 8th Pay Commisson: 44% ஊதிய உயர்வு, மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

இந்த நிலையில் விநியோகம் 20ஆம் தேதி முதல் தொடங்கும் என்று டிஎஸ்ஓ சுனில் குமார் சிங் தெரிவித்து இருந்தார். மேலும் இதன் கீழ், அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு 35 கிலோ (14 கிலோ கோதுமை மற்றும் 21 கிலோ அரிசி) இலவசமாகவும், தகுதியுள்ள வீட்டு அட்டைதாரர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ஐந்து கிலோ (இரண்டு கிலோ கோதுமை மற்றும் மூன்று கிலோ அரிசி) வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது அடுத்த மார்ச் மாதத்தில், கார்டுதாரர்களுக்கு மார்ச் மாத ரேஷன் மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதைக்கிடையில் நாட்டில் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க புகார் எண்கள்
உத்தரப் பிரதேசம் - 18001800150
உத்தரகாண்ட் - 18001802000, 18001804188
மேற்கு வங்காளம் - 18003455505
மகாராஷ்டிரா- 1800224950
பஞ்சாப் - 180030061313
ராஜஸ்தான் - 18001806127
குஜராத்- 18002335500
மத்தியப் பிரதேசம்- 07552441675, உதவி மையம் எண்: 1967 / 181
ஆந்திரப் பிரதேசம் - 18004252977
அருணாச்சல பிரதேசம் - 03602244290
அசாம் - 18003453611
பீகார்- 18003456194
சத்தீஸ்கர்- 18002333663
கோவா- 18002330022
ஹரியானா - 18001802087
ஹிமாச்சல பிரதேசம் - 18001808026
ஜார்கண்ட் - 18003456598, 1800-212-5512
கர்நாடகா- 18004259339
கேரளா- 18004251550
மணிப்பூர்- 18003453821
மேகாலயா- 18003453670
மிசோரம்- 1860222222789, 18003453891
நாகாலாந்து- 18003453704, 18003453705
ஒடிசா - 18003456724 / 6760
சிக்கிம் - 18003453236
தமிழ்நாடு - 18004255901
தெலுங்கானா - 180042500333
திரிபுரா- 18003453665
டெல்லி - 1800110841
ஜம்மு - 18001807106
காஷ்மீர் - 18001807011
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் - 18003433197
சண்டிகர் - 18001802068
தாத்ரா & நகர் ஹவேலி & டாமன் & டையூ - 18002334004
லட்சத்தீவு - 18004253186
புதுச்சேரி - 18004251082

மேலும் படிக்க | ஐபோன் ஆசை... ரூ. 46 ஆயிரம் பணம் இல்லை... இதற்காக கொடூர கொலையா - அதிர்ச்சி சம்பவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News