IPL 2021, PBKS vs DC: 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

டெல்லி அணியின் ஷிகர் தவானின் 69 நாட் அவுட், அணியின் வெற்றியை உறுதி செய்தது. பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி தோற்கடித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 2, 2021, 11:54 PM IST
  • 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
  • மயங்க் அகர்வால் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்தார்
  • நிக்கோலஸ் பூரனுக்கு பதிலாக டேவிட் மாலன் களம் இறங்கினார்
IPL 2021, PBKS vs DC: 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி title=

IPL 2021, PBKS vs DC: டெல்லி அணியின் ஷிகர் தவானின் 69 நாட் அவுட், அணியின் வெற்றியை உறுதி செய்தது. பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி தோற்கடித்தது.

முதலில் டாஸ் வென்ற ரிஷப் பந்த் முதலில் பந்து வீசத் தேர்வு செய்தார். நிக்கோலஸ் பூரனுக்கு பதிலாக டேவிட் மாலன் களம் இறங்கினார். முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்தாலும் அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

தொடர்ந்து மட்டை வீச களம் இறங்கிய டெல்லி அணி 7 விக்கெட்டுகள் மற்றும் 14 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக 2 வது வெற்றியைப் பதிவுசெய்தது. தங்களுடைய கடைசி 5 ஆட்டங்களில் டெல்லி அணி ஒன்றில் மட்டுமே தோல்வியைத் தழுவியது.

Also Read | போட்டியில் RCB ப்ளூ ஜெர்சி அணிவதற்கும் கொரோனாவுக்கும் என்ன தொடர்பு?  

டெல்லி கேபிடல்ஸ் அணி (DC) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) க்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்தது. அவர்கள் தற்போது ஏழு ஆட்டங்களில் விளையாடிய டெல்லி அணி, ஐந்து வெற்றிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஷிகர் தவாண் ஆட்டமிழக்காமல் தொடக்க வீரர் 69 ரன்கள் எடுத்தார்.
 
இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியின் கே.எல்.ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அணிக்கு பின்னடைவாக இருந்தது. ராகுலுக்கு கடுமையான குடல் அழற்சி (acute appendicitis) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டும் என்பது பஞ்சாப் அணிக்கு ஒரு பின்னடைவுதான்.

Also Read | Election Result 2021: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பின்னடைவு

பஞ்சாப் அணியின் கேப்டன் தற்போது போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரராக உள்ளார், ஏழு ஆட்டங்களில் 331 ரன்கள் மற்றும் நான்கு அரைசதங்கள் எடுத்துள்ளார். அவர் இல்லாத நிலையில், மயங்க் அகர்வால் அணியை வழிநடத்துவார்.

புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் அணி தற்போது ஏழு ஆட்டங்களில் மூன்று வெற்றிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. முந்தைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியை பஞ்சாப் அணி பதிவு செய்திருந்தது.

Also Read | TMC முன்னிலை வகிப்பது மாயத்தோற்றமே: கைலாஷ் விஜய்வர்க்கியா

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News