இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி பங்கேற்ப்பு!!

Last Updated : Jun 22, 2017, 02:54 PM IST
இன்று சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி பங்கேற்ப்பு!! title=

யோகா கலை மகத்துவத்தை உலகம் அறிய வேண்டும் என்று ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜுன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா.சபை கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது. 2015-ம் ஆண்டு முதல் யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21 ஆம் தேதி யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்றாவது சர்வதேச யோகா தினம் இன்று (புதன்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. 

இன்று சர்வதேச யோகா தினம். இதனையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வரும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். 51 ஆயிரம் பேர் கலந்துகொள்கிற பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.  

இந்த யோக நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இதைக்குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

யோகாவிற்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு  கிடைத்துள்ளது. அதேவேளையில், யோகா ஆசிரியர்களின் தேவியும் அதிகரித்துள்ளதாக கூறினார். 

சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று, இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

Trending News