தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கும் ராஜேந்திர நகரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவரை அவரது பெற்றோர் இன்று செஞ்சுரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மூச்சு விடுவதற்கே சிரமப்பட்ட அந்தச் சிறுவனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். இதனையடுத்து சிறுவனின் உடல்நிலை ஓரளவு சீரானது. ஆனால் எதற்காக சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இதுகுறித்து சிறுவனிடமே மருத்துவர்கள் கேட்டனர். அதற்கு சிறுவன் அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அந்தச் சிறுவன், நடிகர் யஷ் நடித்த கேஜிஎஃப் 2 படத்தை கடந்த வாரம் பார்த்திருக்கிறான்.படத்தை பார்த்த சிறுவனுக்கு யஷ் நடித்த ராக்கி பாய் கதாபாத்திரம் மிகவும் பிடித்து போயிருக்கிறது.
இதனால் தானும் ராக்கி பாயாக மாற வேண்டுமென்று அவன் முடிவெடுத்திருக்கிறான். அதன்படி ராக்கி பாய் போலவே நடப்பது, பேசுவது என முயற்சி செய்த அவன் ஒருகட்டத்தில் ராக்கி பாய் போல் சிகரெட் பிடித்தால்தான் அவரைப் போலவே மாஸாகவும், கெத்தாகவும் இருக்க முடியும் என நம்பி நேற்று இரவு ஒரே நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்திருக்கிறான். இதற்கு அவனது உடல்நிலை ஒத்துக்கொள்ளாததால் அவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது.
கேஜிஎஃப் 2 படம் மாபெரும் வெற்றியடைந்தாலும் சிலர் அந்தப் படத்தில் அளவுக்கு மீறிய வன்முறை காட்சிகளும், சிறுவர்களையும் இளைஞர்களையும் தவறாக வழிநடத்தும்படி சில காட்சிகள் இருப்பதாக கூறினர்.
மேலும் நடிகர்களுக்கு சமூகத்தின் மீது மிகப்பெரிய அக்கறை வேண்டும். திரையில் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் இருக்க வேண்டுமெனவும் பேச்சு எழுந்தது.
மேலும் படிக்க | ஐதராபாத்தில் மீண்டும் ஒரு ஆனவக்கொலை - பெற்ற மகளை கழுத்தறுத்து கொன்ற பெற்றோர்
தற்போது கேஜிஎஃப் 2 படத்தை பார்த்துவிட்டு சிறுவன் ஒருவன் தவறான பாதைக்கு சென்றது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இனி வரும் படங்களிலாவது சிறுவர்களையும், இளைஞர்களையும் கவனத்தில் கொண்டு காட்சிகள் வைக்க வேண்டும் எனவும், கேஜிஎஃப் 3ஆம் பாகத்தில் தவறாக வழிநடத்தும் காட்சிகள் எதையும் வைக்கக்கூடாது எனவும் சமூக செயற்பாட்டாளர்களும், மனநல மருத்துவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். கவனத்தில் கொள்வாரா ராக்கி பாய்....
மேலும் படிக்க | மணப்பெண்ணாக மாறிய ஆண் - விபரீதத்தில் முடிந்த பேஸ்புக் காதல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR