புதுடெல்லி: பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டருக்கு அடுத்தபடியாக மருந்துகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஏப்ரல் முதல், 800க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை, 10 சதவீதம் வரை நேரடியாக உயர்த்தப்பட உள்ளது. காய்ச்சல், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், தோல் நோய்கள் மற்றும் இரத்த சோகை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளும் இதில் அடங்கும்.
உணவுப் பொருட்களின் விலையும் உயரும்!
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ஏற்கனவே 100ஐத் தாண்டிவிட்டதால், தொடர்ந்து அதிகரித்து வருவது சாமானியர்களுக்குப் பிரச்சனையாகிவிட்டது. தொடர்ந்து டீசல் விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலையும் வரும் நாட்களில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பணவீக்கம் மருந்து பொருட்களையும் பாதித்துள்ளது. திட்டமிட்ட மருந்துகளின் விலையை உயர்த்த மத்திய அரசு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. இதன் காரணமாக, 800க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் முதல் 10 சதவீதத்திற்கும் அதிகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | முடி உதிரும் பிரச்சனையா? இவை காரணமாக இருக்கலாம், இக்னோர் பண்ணாதீங்க
பாராசிட்டமாலின் விலை உயர்ந்தது
அடுத்த மாதம் முதல், வலி நிவாரணி போன்ற அத்தியாவசிய மருந்துகளுக்கும், பாராசிட்டமால், ஃபெனிடோயின் சோடியம், மெட்ரானிடசோல் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் கூற்றுப்படி, மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் உயர்வால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த விலை உயர்வு ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது
கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு, மருந்துத் துறையினர் தொடர்ந்து மருந்துகளின் விலையை உயர்த்தக் கோரி வலியுறுத்தி வருகின்றனர். இதற்குப் பிறகு, பட்டியலிடப்பட்ட மருந்துகளுக்கு 10.7 சதவீதம் விலை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பொடுகுத்தொல்லையா? கவலை வேண்டாம், எளிதான வீட்டு வைத்தியம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR