இந்தூர் பெண் செய்த சாதனை: நடைபாதையில் படித்து முதல் பிரிவில் தேர்ச்சி!!

இந்தூரில் ஒரு நடைபாதையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த ஒரு பெண் தனது பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று முதல் வகுப்பில்  தேர்ச்சி பெற்றுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 9, 2020, 05:12 PM IST
  • அரசு பள்ளியில் கல்வி பயிலும் பாரதி கண்டேகரின் தந்தை ஒரு தினசரி கூலித் தொழிலாளி ஆவார்.
  • பாரதியின் தாய் லட்சுமியும் பள்ளிக்கு சென்றதில்லை.
  • ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆசைப்படுவதாக பாரதி கூறினார்.
இந்தூர் பெண் செய்த சாதனை: நடைபாதையில் படித்து முதல் பிரிவில் தேர்ச்சி!! title=

மனம் இருந்தால் மார்கம் உண்டு என்று கூறுவார்கள். எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளில் நாம் சிக்கிக்கொண்டாலும் நமது மனதில் உறுதி இருந்தால், நாம் நமது இலக்கை அடையலாம். இதற்கு நாம் தினமும் பல உதாரணங்களைக் கண்டு வருகிறோம். இன்று நாம் காணவிருக்கும் நபரும் பலதரப்பட்ட தடைகளைத்  தாண்டி தன் இலக்கை அடைந்துள்ளார். அதற்கு அவருக்கு பரிசும் கிடைத்துள்ளது. 

இந்தூரில் (Indore) ஒரு நடைபாதையில் (footpath) தனது குடும்பத்தினருடன் (family) வசித்து வந்த ஒரு பெண் தனது பத்தாம் வகுப்பு (Class x) தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று முதல் வகுப்பில் (First class) தேர்ச்சி பெற்றுள்ளார். இதை பாராட்டும் வகையில் நகரின் குடிமை அமைப்பு இவருக்கு ஒரு ஃப்ளாட்டை பரிசாக வழங்கியுள்ளது. அரசு பள்ளியில் கல்வி பயிலும் பாரதி கண்டேகரின் (Bharati Khandekar) தந்தை ஒரு தினசரி கூலித் தொழிலாளி ஆவார். படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள பாரதியின் அறிவையும், திறமையையும், அர்ப்பணிப்பையும் பாராட்டிய இந்தூர் மாநகராட்சி ஒரு வீட்டை பரிசாக அளித்துள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் (Prime Minister Awaas Yojana) மூலம் பாரதியின் குடும்பத்திற்கு வீடு (Flat) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

ALSO READ: மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே CBSE பாடப்பிரிவுகள் நீக்கம்: பொக்ரியால்!

இன்று மாணவர்கள் 99%, 100% என மதிப்பெண்கள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் 68% பெற்ற பாரதிக்கு இத்தனை புகழாராம் ஏன் என அனைவருக்கும் தோன்றலாம். ஆனால், பாரதியின் குடும்ப நிலையையும் அவர் எதிர்கொள்ளும் தினசரி சவால்களையும் பார்க்கும்போது 68% என்பது 99% -க்கு சமமாகும்.

கடினமான வீட்டுச் சூழலுக்கு மத்தியில் இந்த சிறுமி செய்த சாதனை பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தன் வெற்றியை தன் பெற்றோருக்கு அர்ப்பணித்த பாரதி, தனது ஆசிரியர்களுக்கும் தனக்கு ஆதரவு அளித்த மற்றவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஆசைப்படுவதாக கூறிய பாரதி, தனக்கு வீட்டை பரிசளித்த நகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். தனது மேல்படிப்பிற்கு நிதியுதவி செய்ய நகராட்சி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பாரதி கூறினார்.

பாரதியின் தந்தை தசரத் கண்டேகருக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். அவர் ஒரு தினசரி கூலித் தொழிலாளியாக பணிபுரிகிறார். தான் பள்ளிக்கு செல்லவில்லை என்றாலும் தனது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பாரதியின் தாய் லட்சுமியும் பள்ளிக்கு சென்றதில்லை. தன் மகள் மிகவும் கடுமையாக உழைத்ததாகவும் தங்கள் குடும்பத்தின் நிலை அவரது படிப்பிற்கு தடையாக இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல், பாரதி படிப்பிலே கவனம் செலுத்தியதாகவும் லட்சுமி தெரிவித்தார்.

Trending News