வரலாற்றில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
Indian #Rupee now at 73.70 versus the US dollar. pic.twitter.com/Wi8WoZ58PY
— ANI (@ANI) October 4, 2018
Sensex opened 604 points down, currently at 35,370.89 pic.twitter.com/oc7DDasPMT
— ANI (@ANI) October 4, 2018
கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், எண்ணெய் மற்றும் காஸ் சிலிண்டர்களின் விலை விண்ணை நோக்கி செல்கிறது. இதனால் நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.
இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இன்று காலை நேர வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 73.77 ரூபாயாக சரிந்தது.