இதுவரை இல்லாத அளவில், ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கீடு!

இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு ரயில்வே துறைக்கு ரூ.1.58 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2019, 06:51 PM IST
இதுவரை இல்லாத அளவில், ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கீடு! title=

இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு ரயில்வே துறைக்கு ரூ.1.58 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது!

2019-20-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதி அமைச்சரும்(பொறுப்பு), ரயில்வே அமைச்சருமான பியூஷ் கோயல் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அறிக்கை தாக்கல் செய்து பேசிய அவர்,.. ''2018-19-ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே மிகுந்த பாதுகாப்பானதாக மாறியுள்ளது. அனைத்து ஆளில்லா லெவல் கிராஸிங்குகளும் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.

ரயில்வே துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவில், ரூ.1.58 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரான 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' விரைவு ரயில், இந்தியப் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தைக் கொடுக்கும்.

நம் பொறியாளர்களால் உயர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு உத்வேகத்தை கொடுக்கும். இதனால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

இந்திய ரயில்வே துறை ரயில்களின் கட்டண ஏதும் உயர்த்தப்படவில்லை. இந்த நிதியாண்டுக்கான நிதி மேலாண்மை 96.2% மேம்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் நிதி மேலாண்மையை 95%-மாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.

மேலும் 2014-ஆம் ஆண்டை காட்டிலும் தற்போதைய திட்டமிடப்பட்ட நிதி ஒதுக்கீடு 148%-மாக அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று பாராளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர்(பொறுப்பு) பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். 5 லட்சம் வரையில் வரி விலக்கு, விவசாயிகளுக்கான நல திட்டம் என பல அம்சங்களை இந்த நிதிநிலை அறிக்கை கொண்டிருந்தது. எனினும் எதிர்கட்சிகள் இந்த அறிக்கையினை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News