ஜூன் 30 வரை முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட் ரத்து; சிறப்பு ரயில்கள் இயங்கும்

இந்திய ரயில்வே ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில்களையும் ரத்து செய்தது. டிக்கெட்டுக்கான பணம் திருப்பித் தரப்படும். அதேநேரத்தில் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயங்கும் எனவும் அறிவிப்பு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 14, 2020, 12:08 PM IST
  • ஜூன் 30 வரை பயணத்திற்காக முன்பதிவு செய்த அனைத்து பயணச்சீட்டுகளையும் ரயில்வே ரத்து
  • ரத்து செய்யப்பட்ட அனைத்து பயணச்சீட்டுகளுக்கான முழு பணத்தைத் திருப்பித் தரப்படும்.
  • மே 12 முதல் தொடங்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்.
  • கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாட்டில் லாக்-டவுன் செயல்படுத்தப்பட்டதால், மார்ச் 24 முதல் பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டன.
ஜூன் 30 வரை முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட் ரத்து; சிறப்பு ரயில்கள் இயங்கும் title=

புது டெல்லி: ஜூன் 30 வரை பயணத்திற்காக முன்பதிவு செய்த அனைத்து பயணச்சீட்டுகளையும் ரயில்வே ரத்து செய்துள்ளது. இந்த செய்தியை ரயில்வே அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்தது. ரத்து செய்யப்பட்ட அனைத்து பயணச்சீட்டுகளுக்கான முழு பணத்தைத் திருப்பித் தரப்படும். அதாவது ரத்து கட்டணம் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மெயில் (Mail), எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புறநகர் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மே 12 முதல் தொடங்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் ரத்து செய்யப்படவில்லை. ஏற்கனவே மே 17 வரை மற்ற அனைத்து ரயில்களுக்கான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. இது தவிர, வழக்கமான ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் ரயில்வே தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாட்டில் லாக்-டவுன் செயல்படுத்தப்பட்டதால், மார்ச் 24 முதல் பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டன. இதற்கிடையில், சரக்கு ரயில்கள் தொடர்ந்து இயங்கின. ரயில்வே நிர்வாகம் மார்ச் 12 முதல் புதுதில்லியில் இருந்து நாட்டிற்கு 15 வழித்தடங்களில் ரயில்களைத் இயக்கத் தொடங்கியது. அதிக முன்னெச்சரிக்கை மற்றும் பல சோதனைக்கு பிறகு, இந்த ரயில்களில் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

முன்னதாக, ரயில்வே வாரியம் புதன்கிழமை தற்போதைய சிறப்பு ரயில்களில் பயணத்திற்கான காத்திருப்பு பட்டியலை மே 22 முதல் தொடங்கும் எனக் கூறியிருந்தது. தற்போதைய சிறப்பு ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் மே 22 முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் காத்திருப்பு பட்டியலில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடு மே 22 முதல் தொடங்கும்.

இருப்பினும், இந்த ரயில்களில் காத்திருப்பு பட்டியலை (Waiting List) மூன்றாம் ஏசி வகுப்பில் 100, இரண்டாம் ஏசி வகுப்பில் 50, ஸ்லீப்பர் வகுப்பிற்கு 200, நாற்காலி ஏசி காருக்கு 100, முதல் ஏசி மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கு 20-20 என ரயில்வே நிர்ணயித்துள்ளது.

Trending News