ரயில் சேவை "ரத்து" தொடரும்.. செய்தி உண்மை இல்லை: இந்திய ரயில்வே அறிவிப்பு

தொற்று வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என்று வாரியம் கூறியிருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 10, 2020, 07:53 PM IST
ரயில் சேவை "ரத்து" தொடரும்.. செய்தி உண்மை இல்லை: இந்திய ரயில்வே அறிவிப்பு title=

புது டெல்லி: கொரோனா தொற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை அனைத்து எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் புறநகர் ரயில் ரயில் சேவைகளுக்கான தடை தொடரும் என இந்தியன் ரயில்வே (Indian Railway) வாரியம் அறிவித்ததாக வெளியான செய்தி உண்மை இல்லை எனவும், வாரியம் தரப்பில் இருந்து எந்தவித சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை எனவும் India Railways தெரிவித்துள்ளது. 

முன்னதாக, தொற்று வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என்று வாரியம் கூறியிருந்தது.

ஜூலை 01 முதல் ஆகஸ்ட் 12 வரை வழக்கமான நேர அட்டவணைக்குட்பட்ட ரயில்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டு பயணிகளுக்கு முழு கட்டணமும் திருப்பித் தரப்படும் என அறிவித்திருந்தது.

இருப்பினும், தற்போது இயக்கத்தில் உள்ள 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்.

இந்தியாவில் இதுவரை 22,15,074 கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளன, 44,386 பேர் வைரஸ் காரணமாக இறந்துள்ளனர்.

Trending News