தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும் என மியான்மரில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

யாங்கோன்-புது தில்லி இடையில் பிப்ரவரி 4 ஆம் தேதி பறக்கவிருந்த ஏர் இந்தியா விமானம் "தவிர்க்க முடியாத காரணங்களால்" பிப்ரவரி 11 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று யாங்கோனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 2, 2021, 02:26 PM IST
  • கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் NLD மோசடி செய்து தேர்தலில் வெற்றி பெற்றதாக மியான்மர் இராணுவம் குற்றம் சாட்டியது.
  • இதை காரணம் காட்டி பல அரசியல் தொண்டர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டபனர்.
  • பிடென் நிர்வாகம் உடனடியாக பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என அச்சுறுத்தியது.
தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும் என மியான்மரில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல் title=

மியான்மரை இராணுவம் கையகப்படுத்திய பின்னர், அநாட்டில் பதற்றம் ஏற்படலாம் என்பதை கருத்தி கொண்டு யாங்கோனில் உள்ள இந்திய தூதரகம்,  இந்திய குடிமக்கள் மியான்மாருக்கான தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு எச்சரித்தது.

"மியான்மரில் (Myanmar) சமீபத்திய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அனைத்து இந்திய குடிமக்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதோடு, தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும்" என்று தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

யாங்கோன்-புது தில்லி இடையில் பிப்ரவரி 4 ஆம் தேதி பறக்கவிருந்த ஏர் இந்தியா விமானம் "தவிர்க்க முடியாத காரணங்களால்" பிப்ரவரி 11 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று யாங்கோனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

திங்களன்று, மியான்மரின் இராணுவ ஆட்சியாளர்கள் ஜனநாயக ஆதரவு தேசிய லீக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகி (Aung Sang Suu Kyi) மற்றும் அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களை கைது  செய்துள்ளனர்

மியான்மர் இராணுவம் ஒரு முன்னாள் ஜெனரலை அதிபராக நியமித்து "சட்டமன்ற, நீதித்துறை மற்றும் நிறைவேற்று அதிகாரங்களை" இராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லேங்கிடம் ஒப்படைத்தது.  இந்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனும் மற்ற மேற்கத்திய தலைவர்களும் விமர்சித்துள்ளனர்.

சூகியை விடுவிப்பதற்கான கோரிக்கைகளுக்கு மத்தியில் ஐ.நா.பாதுகாப்புக் குழு (UNSC) செவ்வாய்க்கிழமை கூடி இந்த விவகாரம் குறித்து விவாதிக்கும்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் NLD மோசடி செய்து தேர்தலில் வெற்றி பெற்றதாக மியான்மர் இராணுவம் குற்றம் சாட்டியது. இதை காரணம் காட்டி பல அரசியல் தொண்டர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டபனர்.

மியான்மாரில் இராணுவம் மீண்டும் நாட்டின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டால், "தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று  எச்சரித்த பிடென் நிர்வாகம் உடனடியாக பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என அச்சுறுத்தியது.

ALSO READ | Myanmar coup: மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு, நடந்தது என்ன? 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News