1971 போரை பாகிஸ்தானை நினைவில் கொள்ளவேண்டும். சீண்டினால் தக்க பதிலடி: இந்தியா எச்சரிக்கை

1971 போரை பாகிஸ்தானை நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் கொடுக்கும் பதிலடி பாகிஸ்தான் வரலாற்று புத்தகத்தில் இடம் பெரும் என இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 4, 2019, 04:16 PM IST
1971 போரை பாகிஸ்தானை நினைவில் கொள்ளவேண்டும். சீண்டினால் தக்க பதிலடி: இந்தியா எச்சரிக்கை title=

ஸ்ரீநகர்: பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என அனைத்து தரப்பிலிருந்தும் எங்களுக்கு செய்தி வந்துள்ளது. 1971 போரை பாகிஸ்தானை நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் கொடுக்கும் பதிலடி பாகிஸ்தான் வரலாற்று புத்தகத்தில் இடம் பெரும் என லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ் தில்லான் எச்சரித்துள்ளார்.

வடக்கு இராணுவத்தின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் காவல்துறை டி.ஜி.யுமான லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ் தில்லான் ஸ்ரீநகரில் செய்தியாளர் சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியது, ஜம்மு-காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத சதியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ஜம்மு-காஷ்மீரின் எல்லைகோடு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய பாதுகாப்புப் படை வீரர்களின் காரணமாக பாகிஸ்தானின் முயற்ச்சி வெற்றி பெற முடியவில்லை. பாகிஸ்தானில் இருந்து ஒவ்வொரு நாளும் ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இரண்டு பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம். அவர்கள் இருவரும் லஷ்கருடன் தொடர்புடையவர்கள். பாகிஸ்தானில் உள்ள அனைத்து ஏவுதளங்களிலும் ஏராளமான பயங்கரவாதிகள் இடம் பெற்றிருப்பதாக அவர் கூறினார்.

வான்வெளியில் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் எந்த முயற்சிகளை மேற்கொண்டாலும், அதற்கு பொருத்தமான தக்க பதிலடியை இந்திய அளிக்கும் என்று கூறினார். குல்மார்க் மாவட்டத்தில் அமைதி நிலவுவதாகவும், வன்முறை சம்பவங்கள் அங்கு நடைபெற வில்லை. நீங்கள் சென்று குல்மார்க்கின் நிலைமையைக் காணலாம் எனவும் கூறினார்.

Trending News