வாரணாசியில் ஜப்பான் ஸ்டைலில் மேம்படுத்தப்படும் இயற்கை வனப்பகுதி

காசியில் சுமார் ஐந்து முதல் ஆறு குளங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன, வரும் ஆண்டில், சுற்றுலாப் பயணிகள் புலம்பெயர்ந்த பறவைகளின் கூக்குரலையும் கேட்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 25, 2021, 07:18 PM IST
  • ஜப்பானின் மியாவாகி முறை என்பது ஜப்பானிய தாவரவியலாளர் அகிரா மியாவாகி உருவாக்கிய ஒரு நுட்பமாகும்.
  • இது அடர்த்தியான காடுகளை உருவாக்க உதவுகிறது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவுவதோடு, சுற்றுச்சூழல் சுற்றுலாவையும் ஊக்குவிக்கும்.
வாரணாசியில் ஜப்பான் ஸ்டைலில் மேம்படுத்தப்படும் இயற்கை வனப்பகுதி  title=

ஜப்பானிய பாணியில் வாரணாசியில் இயற்கை காடுகள் உருவாக்கப்படுகின்றன

வாரணாசியில் (Varanasi) உள்ள உண்டி கிராமத்தின் புறநகர் பகுதியில் ஜப்பானின் மியாவாகி (Miyawaki) என்னும் காடு வளர்ப்பு முறையைப் பயன்படுத்தி இயற்கை காடுகள் உருவாக்கப்படுகின்றன.

ஜப்பானின் மியாவாகி  முறை என்பது ஜப்பானிய (Japan) தாவரவியலாளர் அகிரா மியாவாகி  உருவாக்கிய ஒரு நுட்பமாகும், இது அடர்த்தியான காடுகளை உருவாக்க உதவுகிறது.

இந்த நுட்பத்தின் மூலம் தாவர வளர்ச்சி 10 மடங்கு வேகமாக இருக்கும் என்பதால்,  உருவாக்கும் வனப்பகுதி வழக்கத்தை விட 30 மடங்கு அடர்த்தியாகவும் இருக்கும்.  ஒரு பகுதியில் அதிக அளவிற்கு அந்த மண்ணிற்கு ஏற்ற தாவரங்கள், மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. மேலும்  3 ஆண்டுகளுக்குப் பிறகு பராமரிப்பு தேவையில்லை என்ற நிலை ஏற்படுகிறது.

இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உதவுவதோடு, சுற்றுச்சூழல் சுற்றுலாவையும் ஊக்குவிக்கும்.

நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றாகவும், உத்தரபிரதேசத்தில் ஆன்மீக தலமாகவும் விளங்கும் வாரணாசி நூற்றுக்கணக்கான புனித கோயில்களையும், மலைத்தொடர்களையும் கொண்டுள்ளது. 

இந்த திட்ட விபரங்களை மேம்பாட்டு ஆணையம் சுற்றுலாத் துறைக்கு அனுப்பியுள்ளதாக வாரணாசி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் இஷா துஹான் தெரிவித்தார்.

உண்டி கிராமத்தின் சுமார் 36.225 ஹெக்டேரில் இயற்கை காடு உருவாக்கப்படும். சுமார் 4.3 கிலோமீட்டர் அளவிற்கு வேலி போடும்  பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  இது ஜூலை 2021 க்குள் நிறைவடையும். 

இந்த திட்டத்தில்,  கியோட்டோ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சிவன் நகரம் விரைவில் உருவாக்கப்படும்

நகர்ப்புற காடுகளை உருவாக்குவது காசியை மேம்படுத்த உதவும்

காசியில் சுமார் ஐந்து முதல் ஆறு குளங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன, வரும் ஆண்டில், சுற்றுலாப் பயணிகள் புலம்பெயர்ந்த பறவைகளின் கூக்குரலையும் கேட்கலாம்.

இனி வாரணாசி  இயற்கை  ஆர்வலர்களுக்கு ஒரு வரமாக இருக்கும். காடுகளின் நடுவில் படகு சவாரி செய்ய முடியும்.

யோகாவிற்கும், உணவு விடுதிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு வெவ்வேறு சுவையான உணவுகள் கிடைக்கும்.

தாமரை குளங்கள் மற்றும் மலர் குளங்களின் அழகை மக்கள் காணும் வகையில் ஒரு மர பாலம் கட்டப்பட்டுள்ளது. காடுகளில் அனைத்து வகையான பூக்களும் கிடைக்கும்.

 

Trending News