பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 330.45 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து காணப்படுகிறது.
மத்திய பட்ஜெட் டிசம்பர்-1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் தொடர் சரிவை சந்தித்து வந்த மும்பை மற்றும் தேசிய பங்குசந்தை கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று முன்தினம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 0.94 சதவீதம் வரை அதிகரித்து காணப்படுகிறது. அதை தொடர்ந்து, பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இன்று காலை 167 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து.
இந்நிலையில், தற்போது நிலவரப்படி சென்செக்ஸ் 330.45 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து காணப்படுகிறது.
Sensex up by 330.45 points, currently at 34,413.16: Nifty up by 100.15 points, currently at 10,576.85
— ANI (@ANI) February 8, 2018
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 330 புள்ளிகள் அதிகரித்து, தற்போது 34,413 ஆக உள்ளது. அதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 100 புள்ளிகள் அதிகரித்து, தற்போது 10,576 ஆக உயர்ந்துள்ளது.