நாடு முழுவதிலும் உள்ள 9 மாநிலங்களில் வெள்ள பாதிப்பு... மத்திய அரசு கவலை..!!!

அஸ்ஸாம், பீகார் முதல் குஜராத் வரை 9 மாநிலங்களில் பருவ மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 22, 2020, 12:02 AM IST
  • நாட்டில், பருமழையினால் 9 மாநிலங்களில் வெள்ளம் நிலைமை ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இதில் அஸ்ஸாம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
    கடந்த அண்டு வெள்ளத்தை எதிர் கொண்ட கேரளாவில் இந்த ஆண்டும் வெள்ளம் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 9 மாநிலங்களில் வெள்ள பாதிப்பு... மத்திய அரசு கவலை..!!! title=

அஸ்ஸாமில், 30 மாவட்டங்களில் 5,133 கிராமங்கள் பாதிக்கப்பட்டு 110  பேர் உயிரிழந்துள்ளனர்.  மற்ற மாநிலங்களிலும் உள்ள நிலையை நினைத்து மத்திய அரசு கவலை கொண்டுள்ளது.

புதுடில்லி(New Delhi): உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு மத்திய நீர் ஆணையத்தின் தரவுகள், அஸ்ஸாம் மட்டுமல்ல, பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும் கடுமையான வெள்ள சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதாக கூறுகின்றன.

அஸ்ஸாமில் (Assam), தற்போது 1,45,648 பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். 

பீகாரில் (Bihar) மொத்தம் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை சீதாமர்ஹி, ஷியோஹர், சுபால், கிஷன்கஞ்ச், தர்பங்கா, முசாபர்பூர், கோபால்கஞ்ச் மற்றும் கிழக்கு சம்பரன். மாநிலத்தில் மொத்தம் 147 கிராமங்களும், 2,64,000 மக்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மாநிலத்தில் 12 NDRF குழுக்கள் பணியில் உள்ளன. 

ALSO READ | இந்த வருடம் அமர்நாத் யாத்திரை இல்லை... அமர்நாத் ஆலய வாரியம் அறிவிப்பு..!!

கடந்த ஆண்டும்  வெள்ளத்தை எதிர் கொண்ட கேரளாவில் (Kerala),  தற்போது 13 மாவட்டங்கள் - திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பதனம்திட்டா, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, காசர்கோடு, வயநாடு, கண்ணூர், மலப்புரம், எர்ணாகுளம் மற்றும்  இடுக்கி  ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  மாநிலத்தின் தென் பகுதியில் 56 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குஜராத்தில் (Gujarat) கூட, 4 மாவட்டங்கள் (தேவ்பூமி துவாரகா, ஜாம்நகர், ராஜ்கோட், போர்பந்தர்) ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன, இந்த பருவமழையில் 81 பேர் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் 55 பேர் காயமடைந்தனர். மத்திய பிரதேசத்தில், 27 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 43 பேர் இறந்தனர். உத்தரபிரதேசத்தில் அயோத்தி, கோண்டா, பஹ்ரைச் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் மொத்தம் 182 வீடுகள் சேதமடைந்துள்ளன.

ALSO READ | தில்லியில் 24% மக்களுக்கு கொரோனா பாதிப்பு.. மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்..!!!

மேற்கு வங்கத்தில், இந்த மழைக்காலத்தில் 23 மாவட்டங்களும் 1,72,016 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர், இங்கு வெள்ளத்தினால் 142 பேர் கொல்லப்பட்டனர். உத்தரகண்ட், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

Trending News